“இந்த படத்திற்கு டைரக்டர் செல்வராகவன் தான், ஆனா கதை அவருடையது இல்லை” – வெளியான ரகசியம்

0
376
selvaragavan
- Advertisement -

தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படம் குறித்து ஒரு ஸ்பெஷலான தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் 18 ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலருக்கும் பேரதிர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

மேலும், இது தொடர்பாக பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் பல முயற்சிகள் செய்து வருகின்றனர். அதோடு பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். தற்போது தனுஷ் தி கிரேட் மேன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார்.

- Advertisement -

தனுஷின் மாறன் படம்:

இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் திருச்சிற்றம்பலம், வாத்தி, sir ஆகிய பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார். படத்தில் மாளவிகா மோகனன், மகேந்திரன், சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

நானே வருவேன் படம் :

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்நிலையில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படம் குறித்து ஒரு ஸ்பெஷலான தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது தனுஷ் அவர்கள் நானே வருவேன் என்ற படத்தில் நடிக்கிறார். கலைப்புலி எஸ் தாணு உடைய வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. செல்வராகவன் இந்த படத்தை இயக்குகிறார். மேலும், இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

-விளம்பரம்-

நானே வருவேன் படம் பற்றிய தகவல்:

இந்த படத்திற்கு யுவன் சங்கர் இசையமைக்கிறார். அதோடு செல்வராகவன் இந்த படத்தை இயக்குவது மட்டும் இல்லாமல் நடித்தும் வருகிறார். மேலும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இந்துஜா மற்றும் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் ஆகியோரும் நடித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு அடுத்த கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

படம் குறித்த ஸ்பெசல் தகவல்:

அது என்னவென்றால், இந்த படத்திற்கு இயக்குனர் செல்வராகவன் தான் இயக்குனர். ஆனால், கதை அவருடையது இல்லையாம். இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியது தனுஷ் என்று கூறப்படுகிறது. பொதுவாகவே செல்வராகவன்- தனுஷ் கூட்டணியில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் வெளியாக இருக்கும் நானே வருவன் படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

Advertisement