மங்காத்தா படத்தில் அஜித் அணிந்த செயினுக்கு பின்னால் இருக்கும் ரகசியத்தை சொன்ன ஆடை வடிவமைப்பாளர்.

By Rajkumar · 31/3/2020

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்திலும் இதே நிலைமைதான் இதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலை ஏற்பட்டு இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் மிகவும் சலித்துப் போய் இருக்கிறார்கள். இதனால் தொலைக் காட்சிகள் அனைத்தும் சீரியல்களை நிறுத்திவிட்டு திரைப் படங்களை ஒளிபரப்ப துவங்கிவிட்டது. இருப்பினும் ஒருசில தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை தூசிதட்டி ரீ-கேப் என்ற பெயரில் மறு ஒளிபரப்பு செய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மங்காத்தா திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

அஜித்தின் திரைப்பட வாழ்க்கையில் மாபெரும் ஹிட் படங்களின் வரிசையில் 'மங்காத்தா' படத்திற்கும் ஒரு முக்கிய இடம் இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011 ஆம் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்த இந்த படத்தில் அஜித் வித்யாசமான ஹீரோ, வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தி இருப்பார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வந்து விடாதா என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதையும் பாருங்க : கொரோனா நேரத்தில் காதலருடன் இணைந்து நயன் வெளியிட்ட வீடியோ. கழுவி ஊற்றிய ரசிகர்கள்.

இந்த படம் வெளியாகி 7 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் இந்த படம் மீண்டும் திரைக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்நோக்கி இருக்கிறாரகள். இந்த நிலையில் நேற்று (மார்ச் 30) மங்காத்தா திரைப்படம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. பல வருடங்கள் கழித்து மீண்டும் ஒளிபரப்பான ஆளும் இந்த திரைப்படத்தை பலரும் கண்டு களித்து ரசித்தார்கள். மேலும் மங்காத்தா என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்தது.

மங்காத்தா திரைப்படம் குறித்து வெங்கட் பிரபு பிரேம்ஜி வைபவ் என்று பலரும் பல்வேறு விதமான திட்டுகளை செய்துவந்தார்கள் இந்த நிலையில் இந்த படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய வாசுகி பாஸ்கர் மங்காத்தா பற்றி இதுவரை யாரும் அறியாத ஒரு விஷயம் குறித்து கூறி இருந்தார்.மங்காத்தா திரை படத்தில் அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் மிகவும் பிரபலமடைந்தது.

இதையும் பாருங்க : இத்தனை நாளா உங்கள தமிழச்சினு நெனச்சிட்டு இருந்தோமே. ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமன்ட்.

https://twitter.com/vasukibhaskar/status/1244572620739100672

அதற்கு அடுத்தபடியாக பிரபலம் அடைந்தது என்னவோ அஜித் அணிந்திருந்த அந்த செயின் தான் இந்த நிலையில் இந்த செயின் குறித்து ஒரு சுவாரசியமான தகவலை கூறியுள்ளார் இந்த படத்தின் ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், இந்த படத்தில் இயக்குனர், ஹீரோவிற்கு டாலருடன் கூடிய ஒரு செயின் இருக்க வேண்டும் என்று எண்ணினார். அதற்கு காரணம் இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் அந்த செயினை கழட்டி நெருப்பில் போட்டு விடுவார் ஹீரோ. இந்த படத்தில் அவர் ஒரு போலீஸ் அதிகாரியாக இருப்பதால் அந்த செயின் கை விலங்கு போன்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார். படப்பிடிப்பின் ஒருநாளைக்கு முன்பாகத்தான் அந்த கைவிலங்கு டாலர் இறுதியானது என்று பதிவு உள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full