இத்தனை நாளா உங்கள தமிழச்சினு நெனச்சிட்டு இருந்தோமே. ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமன்ட்.

0
43047

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிகை, நடன கலைஞர், தொகுப்பாளினி என பல துறைகளில் பங்காற்றி வருகிறார். இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்த “நம்ம வீட்டு பிள்ளை” திரைப்படம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. மேலும், இவர் தொடர்ந்து அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவர் தமிழில் கடைசியாக வானம் கொட்டட்டும் என்ற படத்தில் நடித்திருந்தார். குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமில்லாமல் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க களமிறங்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

- Advertisement -

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் உகாதி பண்டிகை வாழ்த்து கூறி பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து போய் விட்டார்கள். சில தினங்களுக்கு முன்பு தான் உகாதி பண்டிகை முடிந்தது. கொரோனா வைரஸின் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் இந்த உகாதி பண்டிகை கொண்டாட்டங்கள் எல்லாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதை தெலுங்கு வருடப்பிறப்பு என்று அழைப்பார்கள். உகாதி பண்டிகை என்றால் ஆறு வகையான உணவுப் பதார்த்தங்களைச் செய்து கொண்டாடுவது தான் மரபு. சந்தோஷம், கோபம், சோகம்,பயம், வெறுப்பு, ஆச்சரியம் என ஆறு குணங்களுக்கு ஆறு வகையான உணவுகளை செய்து மக்கள் கொண்டாடுவார்கள். இது கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநில மக்களால் அதிகம் கொண்டாடப்படும் விழா.

-விளம்பரம்-

இந்நிலையில் தெலுங்கு வருடப்பிறப்பை கொண்டாடும் வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் ஆச்சரியத்தை குறிக்கும் உணவான மாங்காயை வைத்து உகாதி பச்சடியை செய்து உள்ளார். பின் அந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டு தெலுங்குவில் உகாதி பண்டிகை வாழ்த்து கூறியுள்ளார். இதனை பார்த்து பலரும் நீங்க தமிழ் பொண்ணு தானே நினைத்தோம். ஆனால், நீங்க தெலுங்கு வா?? என்று பல கேள்வி எழுப்பி வருகிறார்கள். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் கூறாமல் உள்ளார்.

சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் சுவர்ணா என்ற கேரக்டரில் நடித்து இருந்தார். இந்த படத்தில் அர்ஜுன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்து இருந்தார். இந்த படத்தில் விஜய் தேவர்கொண்டாவுக்கு மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் க்ரந்தி மாதவ் தான் இந்த படத்தின் கதை, வசனம் எழுத்தாளர் ஆவார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement