கொரோனா நேரத்தில் காதலருடன் இணைந்து நயன் வெளியிட்ட வீடியோ. கழுவி ஊற்றிய ரசிகர்கள்.

0
79283
nayanwiki
- Advertisement -

ஒட்டுமொத்த உலகையும் அச்சத்தின் விளிம்புக்கு கொண்டு சென்று விட்டது கொரோனா வைரஸ். இந்தியாவில் இதுவரை 1251 பேர் பாதிக்கப்பட்டும், 34 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். இந்த கொரோனா வைரசினால் இந்தியாவே ஆட்டம் கண்டுள்ளது. இந்த நிலைமையை சரிசெய்ய உலகமே போராடி வருகிறது. உலக நாடுகள் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் குணமாக 10% உள்ள நிலையில் சீனாவில் மட்டும் 90 சதவீத மக்கள் குணமாகி உள்ளனர். இது குறித்து பல கேள்விகளும், சந்தேகங்களும் சோசியல் மீடியாவில் எழுந்த வண்ணம் உள்ளன.

-விளம்பரம்-

மக்கள் அனைவரும் தனிமைப்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்நிலையில் நடிகை நயன்தாரா அவர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே இருப்பதால் தன்னுடைய காதலருடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : இரவில் பைக்கில் சென்று 40 நாய்களுக்கு உணவழித்த பிக் பாஸ் நடிகை. வீடியோ இதோ.

- Advertisement -

தற்போது இது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தியா முழுவதும் சினிமா முதல் சின்னத்திரை வரை படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பிரபலங்கள் வீட்டில் இருக்கிறார்கள். வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக புத்தகம் படிப்பது, பெயிண்டிங் என ஏதாவது ஒரு விஷயத்தை செய்து வீடியோக்களாக சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். பொதுவாகவே பிரபலங்கள் கிடைக்கும் ஓய்வு நாட்களில் வெளிநாடுகள் பரப்புவது தான் வழக்கம்.

ஆனால், இப்போது இந்த கொரோனா வைரஸினால் வெளிநாடா?? என்று அலறி அடித்து ஓடுகின்றனர். அந்த வகையில் நடிகை நயன்தாராவும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் எப்போது ஓய்வு நேரங்கள் கிடைத்தாலும் காதல் ஜோடிகளாக வெளிநாட்டிற்கு பறந்து விடுவார்கள். தற்போது கொரோனா வைரஸின் காரணமாக இவர்கள் எங்கும் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள்.

-விளம்பரம்-

இவர்கள் இருவரும் சேர்ந்து தற்போது டிக் டாக் வீடியோ ஒன்றை செய்து அதை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கண்றாவியா இது.. சர்க்கரை பொங்கல் மீது மீன் குழம்பு மாதிரி என கலாய்த்து கேலி செய்தும் வருகிறார்கள். ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் யாரும் வெளியில் வரக் கூடாது என்றும், மக்கள் யாரும் வெளியில் வராவிட்டால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கலாம் என்றும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதோடு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மீது கொரோனா சோதனை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். நடிகை நயன்தாரா சினிமா திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும் இப்போது கதைக் களத்திற்கு ஏற்றவாறு தோற்றத்தில் தான் நடித்து வருகிறார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடி நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் செய்யும் காதல் லூட்டிகளை பார்த்து பலரும் புகைந்து உள்ளார்கள் என்று சொல்லலாம்.

Advertisement