ரஜினி, அஜித்தை அடுத்து சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த பெருமை..! விஜய்க்கு கூட இல்லையாம்.!

0
359
Sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் “வேலைக்காரன் ” படத்திற்கு பிறகு படு பிஸியான நடிகராக மாறிவிட்டார். தற்போது பொன்ராம் இயக்கத்தில் “சீமராஜா” படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்திலும், “ஓகே ஓகே” பட இயக்குனர் ராஜேஷ் இயக்கத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

seemaraja

சிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து “சீமாராஜா” படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பொன்ராம். படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முதன் முறையாக நடிகை சமந்தா நடித்துளளார். படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தை போலந்து நாட்டில் வெளியிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

போலந்து நாட்டில் இதுவரை தமிழ் நடிகர்களில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் அஜித் போன்றவர்களின் படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் சிவகாத்திகேயனின் ‘சீமராஜா ‘ படம் போலந்து நாட்டில் வெளியாக இருப்பது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கும் ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாக கருதபடுகிறது.

Samantha-joins-Sivakarthikeyan

இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் ‘சீமராஜா’ படம் போலந்து நாட்டில் வெளியாக இருக்கும் தகவல் குறித்து இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று இந்த படத்தின் போலந்து நாட்டு வெளியிட்டு உரிமையை பெற்றுள்ள செவந்த் சென்ஸ் சினிமெடிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.