மோடி, தாடி வளர்ப்பதக்கான காரணத்தை சொன்ன அண்ணாமலை – பங்கமாக கலாய்த்த சீமான். வைரல் வீடியோ.

0
1259
Seeman
- Advertisement -

பிரதமர் மோடி ஏன் தாடி வளர்க்கிறார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பங்கமாக கலாய்த்து உள்ளார். அண்ணாமலை பா ஜ கவில் சேர்ந்த நாள் முதலே அவரை பல எதிர் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அடிக்கடி அண்ணாமலையும் ஏதாவது ஒரு செயலால் கேலிக்கு உள்ளாகிவிடுகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அண்ணாமலையை பா ஜ கவை சேர்ந்த செந்தில் வேல் ‘சின்ன சங்கி’ என்று கூறிஇருந்தது பலரும் ட்ரோல் செய்யப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இந்நிலையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலக்கட்டத்தில் பிரதமர் மோடி எதற்காக தாடி வளர்த்தார் என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விசித்திரமான விளக்கம் ஒன்றைக் கொடுத்து இருப்பது பலரின் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. சமீபத்தில் கட்சி கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணாமலை, கொரோனா காலத்தில் மோடி, தன்னோட வலியைக் காட்டுறதுக்காகத் தான் தாடி வளர்த்தார். மோடியோட தாடிய டிரிம் பண்றத்துக்கு இந்தியாவுல ஆயிரம் பேர் இருக்காங்க.

இதையும் பாருங்க : பீச்சில் வெள்ளை உடையில் ஆட்டம் அப்பட்டமாக தெரிந்த உள்ளாடை – பார்வதி நாயர் வெளியிட்ட ஹாட் ரீல்ஸ் வீடியோ

- Advertisement -

இருந்தாலும் அவர் தன்னோட வேதனைய காட்டுறதுக்கு தாடி வளர்த்திருக்காரு.எதற்காக ? அதன் மூலமா நமக்கு ஒரு மெஸேஜ சொல்றாரு. ஒவ்வொரு இந்தியனும் கொரோனா காலத்தில அனுபவிக்கிற வலியை நானும் அனுபிவிக்கிறேன்னு காட்டுறதுக்குத் தான் அவர் தாடி வளர்த்திருக்காரு என்று பேசி இருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் சீமான் பங்கேற்ற போது, அண்ணாமலையின் இந்த பேச்சு குறித்து கருத்து கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு பதில் அளித்த சீமான், மக்களின் துயரத்தில் மயிரை வளர்த்து தான் பங்கெடுப்பீர்களா, அவன் அவன் உயிரை காப்பாத்த போராடிகிட்டு இருக்கான்.இதெல்லாம் சேட்டை தானே, இது தான் ஐபிஎஸ் லட்சணம் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement