அவருடன் பணியாற்றியது இளையராஜாவுக்கு பிடிக்கவில்லை, அதான் என்னை ஒதுக்குகிறார் – மேடையில் கண்ணீர் விட்ட சீனுராமசாமி. ஆறுதல் படுத்திய vjs.

0
485
- Advertisement -

இளையராஜா மீது இயக்குனர் சீனு ராமசாமி அளித்திருக்கும் குற்றச்சாட்டு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்ந்த கொண்டிருப்பவர் சீனு ராமசாமி. இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் கூடல்நகர் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு 3 தேசிய விருதுகளை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மாமனிதன், இடம் பொருள் ஏவல். இந்த இரு படங்களும் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளியாக இருக்கும் படம் மாமனிதன். இந்த படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி,ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இந்த படம் இருக்கிறது.

- Advertisement -

மாமனிதன் படம் ரிலீஸ்:

ஆகையால், இந்த படம் ஜூன் 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் வெளியிடுகிறார். மேலும், இந்த படத்திற்காக இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இசை அமைத்திருக்கின்றனர். இந்த நிலையில் மாமனிதன் படத்தின் ரிலீஸுக்காக படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கின்றனர். இதில் இயக்குனர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதி, காயத்ரி, ஆர்கே சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

சீனு ராமசாமி அளித்த பேட்டி:

அப்போது இயக்குனர் சீனு ராமசாமி கூறியிருந்தது, நான் இளையராஜா மீது மிகப்பெரிய பற்று கொண்டவன். அதனால் தான் படத்தின் முதல் ஷாட் எடுக்க கேமராவை இளையராஜாவும், அவரது சகோதரர்களும் வாழ்ந்த தெருவில் வைத்தேன். படத்திற்கு முதலில் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைப்பதாக இருந்தது. ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை கார்த்திக் ராஜா விலகிக்கொண்டார். இந்த சமயத்தில் படத்தை பார்த்த இளையராஜா என்னை கூப்பிடாமலேயே ரீ ரெக்கார்டிங்கை முடித்துவிட்டார்.

-விளம்பரம்-

இளையராஜா செய்த வேலை:

இது எந்தவிதத்தில் நியாயம்? அதுமட்டுமில்லாமல் அவர்களிடம் போகும் போது அவர்களுக்கு சரியாக இருக்கும் கவிஞர்கள் வைத்துதான் பாடல் எழுதுவார்கள் என்று சிலர் கூறி இருந்தார்கள். நானும் அதற்கு ஒத்துக் கொண்டேன். ஆனால், பாடல் வரிகள் கூட எனக்கு தெரியவில்லை. ஒரு முறை யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாள் விழாவுக்கு சென்றிருந்த போது கருணாகரன் என்பவர் என்னிடம் வந்து வணக்கம் நான் பாடலாசிரியர் கருணாகரன். மாமனிதன் படத்துக்கு பாடல் எழுதி இருக்கிறேன் என்று கூறியிருந்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

சீனு ராமசாமியின் குற்றச்சாட்டு:

ரீ ரெக்கார்டிங்கிற்கு என்னை அழைக்காதது குறித்து யுவன் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர், நீங்கள் கார்த்திக் ராஜா பெயரை போடாததால் அவரது தந்தை படத்தின் ப்ரோமோஷன்களில் கலந்துகொள்ள மாட்டார் என்று சொன்னார். எனக்கு அது அதிர்ச்சி அளித்தது. வைரமுத்து எனது படங்களில் தொடர்ந்து பாடல் எழுதியவர். அவருடன் வேலை செய்தது பிடிக்கவில்லை என்றால், யுவனும் தானே வைரமுத்துவுடன் வேலை செய்திருக்கிறார். அவருடன் மட்டும் சேர்ந்துகொண்டு என்னை ஏன் ஒதுக்குகிறார்? என்று கூறி இருந்தார். இப்படி சீனு ராமசாமி அளித்திருக்கும் குற்றச்சாட்டு கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement