சின்னத்திரை சீரியலில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜெயலட்சுமி. இவர் பாஜக கட்சியை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் சின்னத்திரை நடிகையும், பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி மீது கந்துவட்டி புகாரை மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் கமிஷனர் அலுவகத்தில் கொடுத்துள்ளனர். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சென்னை பாடி, தெற்கு மாட வீதியை சேர்ந்தவர் கீதா.

இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ஜெயலட்சுமி மீது புகார் கூறியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, நான் வெள்ளை செம்பருத்தி என்ற பெயரில் மகளிர் சுய உதவி குழு ஒன்றை நடத்தி வருகிறேன். இந்த குழுவிற்கு நான் தலைவியாக உள்ளேன். எனது கணவரோ ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். நானும் சில பெண்களும் சேர்ந்து தான் வெள்ளை செம்பருத்தி என்ற மகளிர் சுய உதவி குழுவை நடத்தி வருகிறோம்.

இதையும் பாருங்க : அதான் போன் புடுங்கிட்டாங்களே எப்படி போஸ்ட் பண்றீங்க – ரசிகரின் சந்தேகத்தை தீர்த்து வைத்த Survivor போட்டியாளர்.

Advertisement

இந்த நிலையில் சின்னத்திரை சீரியல் நடிகையும், பாஜகவை சேர்ந்த ஜெயலட்சுமி எங்களுக்கு அறிமுகமானார். பாஜக உறுப்பினர்கள் சேர்ப்பதற்காக நடிகை ஜெயலட்சுமி எங்கள் பகுதிக்கு வந்தார். பின் குழுவில் உள்ள பெண்களை பாஜக உறுப்பினர்களாக சேர்ந்தார். அவர் எங்களை பாஜக கூட்டத்திற்கு கூட அழைத்து சென்றார். அப்போது நாங்கள் நடத்தும் சுய உதவி குழுக்கள் குறித்து கேட்டறிந்து வங்கி மூலம் கடன் வாங்க ஏற்பாடு செய்தார். எங்கள் குழுவில் உள்ள பெண்களின் வங்கி கணக்கில் பத்து பைசா என்ற விதத்தில் எங்களுக்கு கடனாக பணத்தை தந்தார்.

அதற்காக எங்களிடம் இருந்து அவர் வங்கி காசோலை ஜாமீனாக பெற்றுக்கொண்டார். நாங்களும் மாதா மாதம் பணம் செலுத்தினோம். தற்போது நாங்கள் கொடுத்த பணத்தை அனைத்தையும் வட்டி என்று கூறுகிறார் ஜெயலட்சுமி. பின் நடிகை ஜெயலட்சுமியும், வழக்கறிஞர் ஒருவரும் சேர்ந்து எங்களை கூண்டோடு அழித்து விடுவதாக மிரட்டி வருகிறார்கள். மேலும், எங்களிடம் இருந்து பெற்ற காசோலைகளை வைத்து 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர் பூர்த்தி செய்யப்படாத பச்சை காகிதத்தில் பெற்ற கையெழுத்துக்களை கொண்டு எங்கள் மீது வழக்கு பதிவு செய்வதாகவும் மிரட்டி வருகிறார்கள்.

Advertisement

அதோடு நடிகை ஜெயலட்சுமி எங்களை போனில் மிரட்டிய ஆடியோவை காவல்துறையிடம் கொடுத்து இருக்கிறோம் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து நடிகை ஜெயலட்சுமியின் வழக்கறிஞரிடம் கேட்டபோது எங்கள் மீது பொய்யான புகார் கொடுக்கப்படுகிறது. சட்டப்படி நாங்கள் அதை சந்திப்போம் என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement