அதான் போன் புடுங்கிட்டாங்களே எப்படி போஸ்ட் பண்றீங்க – ரசிகரின் சந்தேகத்தை தீர்த்து வைத்த Survivor போட்டியாளர்.

0
3486
survivor
- Advertisement -

சமீபகாலமாகவே ஒவ்வொரு சேனலும் தங்களின் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமாக நிகழ்ச்சிகளைக் கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி சர்வைவர் என்ற ஒரு ரியாலிட்டி ஷோவை ஒளிபரப்புகிறார்கள். வெவ்வேறு குணாதிசியங்கள் நிறைந்த மனிதர்களை சவால்கள் நிறைந்த ஓரிடத்தில் ஒன்று சேர்த்த பிறகு அவர்கள் கொடுக்கும் சவால்களை கடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சர்வைவர்.

-விளம்பரம்-

மேலும், ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்கியிருக்க அங்கிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் சர்வைவர். நடிகர் அர்ஜுன் முதல் முறையாக தொகுப்பாளராக இந்த நிகழ்ச்சி மூலமாக அறிமுகமாகிறார். சவால்கள் நிறைந்த தனித்தீவில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

இதையும் பாருங்க : கர்ப்பமாக இருக்கவங்களா நடிக்கிறாங்க, ஆனால், முகப்பரு இருக்கும் என்னை இப்படி சொல்றாங்க – தீபிகா வருத்தம்.

- Advertisement -

இந்த ஷோவில் விஜயலக்ஷ்மி, பிகில் பட நடிகை காயத்ரி, ஸ்டண்ட் மாஸ்டர் பெசன்ட் நகர் ரவி, விக்ராந்த், ஸ்ரிஷ்டி டாங்கே, vj பார்வதி, இந்திரஜா, நடிகர் நந்தா, தம்பி ராமய்யா மகன் உமாபதி என்று பலர் கலந்து கொண்டு இருக்கின்றனர். அதே போல ரசிகர்களுக்கு பரிட்சமில்லாதா பலர் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் முதல் நாளே போட்டியாளர்களிடன் இருந்து செல் போன்கள் பெறப்பட்டது. ஆனால், போட்டியாளர்களின் சமூக வலைதள பக்கங்களில் இருந்து தொடர்ந்து பதிவுகள் வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இந்திரஜா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இதனை பார்த்த ரசிகர் ஒருவர், அங்க இப்படி மொபைல் யூஸ் பண்ணலாமா. எப்படி போஸ்ட் போடுறீங்க என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த இந்திரஜா, போஸ்ட் எல்லாம் டீம் தான் போடுறாங்க. புகைப்படங்கள் எல்லாம் சேனல் மூலம் பெறுகிறார்கள் என்று கூறியுள்ளார் இந்திரஜா. ஆமா, உண்மை தான் அங்கு போன் யூஸ் பண்ண முடியாது, நீங்க நம்பனும்.

Advertisement