இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் இன்னும் சில நாட்களில் வர உள்ளது இதற்காக பல்வேறு கட்சிகளும் தேர்தல் பணிகளை மும்மரபடுத்தி வருகின்றனர். அதேபோல தேர்தல் ஆணையமும் வாக்குப்பதிவை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளையும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த நிலையில் ஓட்டு போட்ட பின்னர் கையில் மையுடன் இருக்கும் புகைப்படத்தை அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என்று வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வட மாநிலமான மிசோரமில் ஒரு மக்களவைத் தொகுதி உள்ளது.

Advertisement

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் அந்தப் பகுதியில் மொத்தம் 7லட்சத்து 23 ஆயிரத்து 763 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், தேர்தலின்போது இதுவரை 100 சதவீத வாக்கு பதிவானது இல்லை. கடந்த ஆண்டு கூட மிகவும் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் வாக்களித்து கையில் மையுடன் இருக்கும் புகைப்படத்தை அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என்று மிசோரம் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

மிசோரமில் வரும் 11ஆம் தேதி முதல் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அந்த தேதியில் வாக்களித்துவிட்டு கையில் மையுடன் இருக்கும் செல்பி புகைப்படத்தை #Mizoramelections என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தாலோ அல்லது தேர்தல் ஆணையத்தின் வாட்ஸப் நம்பருக்கு அனுப்பினாலோ முதல் பரிசாக ரூ 7,000 வழங்கப்பட உள்ளது. மேலும், இரண்டாம் பரிசாக 3 ஆயிரமும் மூன்றாம் பரிசாக 2 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement