நைட் 11.30 மணிக்கு கதவ தட்டினாங்க. நல்ல வேலை நான் வீட்டில் இல்லை - செம்பருத்தி கார்த்தி.

By Rajkumar · 8/4/2020

தொலைக்காட்சி தொடரின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகர் கார்த்திக் ராஜ். இவர் செம்பருத்தி சீரியல் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர். இதன் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழக ரசிகர்கள் மத்தியில் அதிக இடம் பிடித்த சீரியலில் செம்பருத்தியும் ஒன்று. இந்த செம்பருத்தி சீரியல் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த தொடர் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர். அது மட்டும் இல்லாமல் தெலுங்கில் வெளியான ‘முத்த மந்தாரம்’ என்ற தொடரின் தழுவல்.

இந்த சீரியலில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் ஷபானாவும், அகிலாண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் பிரியா ராமனும் நடித்து வருகிறார்கள். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நபர்களில் கார்த்திக் ராஜும் ஒருவர்.

இதையும் பாருங்க : ப்ளீஸ் போயிடு கொரோனா, கண்கலங்கி கை கூப்பி கெஞ்சிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

இந்நிலையில் சமீபத்தில் கார்த்திக் ராஜ் அவர்கள் ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். தற்போது அந்த டீவ்ட் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் ரசிகர் ஒருவர் கேட்டது, உங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு விசித்திரமான விஷயம் நடந்திருக்கிறதா?? என்று கேட்டுள்ளார். அதற்கு கார்த்திக் ராஜ் அவர்கள் கூறியது, ஒருமுறை நடந்திருக்கிறது.

என்னுடைய ரசிகர் ஒருவர் இரவு 11.30 மணிக்கு என்னை சந்திக்க வேண்டும் என்று எல்லாரையும் எழுப்பினார். என்னுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று அந்த அர்த்த ராத்திரியில் அனைவரையும் எழுப்பினார். அப்போது நான் ஊரில் இல்லை. இது தான் என் வாழ்க்கையில் நடந்த விசித்திரமான விஷயம் என்று கூறியிருந்தார். அப்படி அவர் கூறிய கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்தும் வருகிறார்கள்.

மேலும், இந்த செம்பருத்தி சீரியலில் நடித்து வருகிற நடிகர் கார்த்திக் ராஜ் அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2011 ஆம் ஒளிபரப்பான ‘கனா கடந்த காலங்கள்’ சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானவர். அதன் பின்னர் கார்த்திக் அவர்கள் அதே சேனலில் ஒளிபரப்பான ஆபிஸ் தொடரில் நடித்தார். இந்த ஆபிஸ் சீரியல் மூலம் கார்த்திக் ராஜ் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இதையும் பாருங்க : வாத்தி கம்மிங் பாடலுக்கு மணிமேகலை போட்ட ஆட்டம். புலம்பிய ஹுசைன்.

பின் கார்த்திக் ராஜ் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார். இவர் சின்னத்திரை மட்டும் இல்லாமல் வெள்ளித்திரையிலும் 465, நாலு பேருக்கு நல்லதுன்னா ஏதும் தப்பில்லை போன்ற படங்களில் நடித்தார். ஆனால், சினிமாவில் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடக்கத்தால் மீண்டும் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார். தற்போது இவர் செம்பருத்தி சீரியலில் நடித்து வருகிறார். செம்பருத்தி சீரியல் இந்த அளவிற்கு முதலில் இடத்தில் இருப்பதற்கு காரணம் கதைக் களம், ஆதி–பார்வதி இடையேயான காதல் என்று சொல்லலாம்.

behindtalkies AMP · Quick view
View full