ப்ளீஸ் போயிடு கொரோனா, கண்கலங்கி கை கூப்பி கெஞ்சிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.

0
1916
- Advertisement -

கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் என்ற நோய் தான் உலக நாடுகளை அச்சுறுத்து வருகிறது. சைனாவில் பரவ தொடங்கிய இந்த வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளில் பரவி இதுவரை 82,000 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தியாவை பொறுத்த வரை 4789  பேருக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும்,124 பேர் உயிரிழந்துள்ளனர். . தற்போது தமிழகத்தை பொறுத்த வரை 728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 8 பேர் உயிரிழந்து உள்ளார்கள். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-11-577x1024.jpg

- Advertisement -

நோய் பரவல் அதிகரித்தால் அதை சமாளிக்க தேவையான மருத்துவமனை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு சில மாநிலங்களில் இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணத்தால் திரைப்படம் மற்றும் சீரியல்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு நடிகர் நடிகைகளும் கொரோணா பற்றிய விழிப்புணர்வுகளை சமூக வலைதளத்தில் செய்து வரும் நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை புகழ் சித்ரா கொரோனாவை சென்று விடு என்று கெஞ்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரில் பல்வேறு ஜோடிகள் நடித்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் அது கதிர் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் மற்றும் சித்ராவைத்தான். இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இளம் ரசிகர்களையும் கொண்டிருக்கிறார்.

மேலும், இவருக்கு முல்லை என்ற பெயரில் இளம் ரசிகர் ஒருவர் சமூகவலைதளத்தில் ஒரு பக்கத்தை கூட ஆரம்பித்து இருக்கிறார். மேலும் அவ்வப்போது அவர் பரிசுகளை கூட சித்ராவிற்கு அனுப்பியுள்ளார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ் போட்டுள்ள முல்லை, கை கூப்பி, கண் கலங்கி நிற்கும் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு

Advertisement