வாத்தி கம்மிங் பாடலுக்கு மணிமேகலை போட்ட ஆட்டம். புலம்பிய ஹுசைன்.

0
8796
manimegalai
- Advertisement -

சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்தவர் மணிமேகலை. பின்னர் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து இவர் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பானியாகவும் இருந்து உள்ளார். இதை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்களிடையே பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. மணிமேகலை அவர்கள் உசேன் என்பவரை நீண்ட வருடமாக காதலித்து வந்தார். பின் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள். சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை கோமாளியாக பங்கு பெற்றார்.

-விளம்பரம்-

கொரோனா தாக்கத்தினால் ஒட்டுமொத்த மக்களும் ஆட்டம் கண்டு போய் உள்ளார்கள். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கோர தாண்டவம் தான் தலைவிரித்து ஆடி வருகிறது. கொரோனாவினால் நாளுக்கு நாள் மக்களின் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. கொரோனாவை எதிர்த்து உலக நாடு முழுவதும் உள்ள அரசாங்கம், மருத்துவர்கள், காவல்துறை, நர்ஸுகள் என பல பேர் தங்கள் உயிரை பயணம் வைத்து போராடி வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவினால் 5194 பேர் பாதிக்கப்பட்டும், 149 பேர் பலியாகியும் உள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இதையும் பாருங்க : மேலாடையை சில பட்டனை பூட்டாமல் ரம்யா பாண்டியன் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.

- Advertisement -

இதனால் போக்குவரத்து, கடைகள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. சினிமா முதல் சின்னத்திரை வரை என அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவால் படப்படிப்புகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டதால் பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்குகிறார்கள். பல பிரபலங்கள் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து தங்களால் முடிந்த வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

பிரபலங்கள் பலர் ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக டிக் டாக் வீடியோக்கள், சமையல் செய்வது, புத்தகம் படிப்பது, உடற்பயிற்சி செய்வது என பல வேலைகளை செய்து வீடியோக்களாக பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தொகுப்பாளனி மணிமேகலையும் அவருடைய கணவர் ஹுசைன்னும் சேர்ந்து நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்கள்.

இதையும் பாருங்க : கடன் பிரச்சனையில் சிக்கிய விநியோகிஸ்தர்கள். மௌனம் காக்கும் விஜய் மாமா. பஞ்சாயத்து செய்த சசிகலா புஷ்பா

-விளம்பரம்-

அதில் மணிமேகலை அவருடைய கணவர் இருவரும் சேர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திலிருந்து ‘வாதி கம்மி’ என்ற பாடலுக்கு செம்மையா குத்தாட்டம் போட்டுள்ளார்கள். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடீயோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள மணிமேகலையின் கணவர் ஹுசைன்.

அதில், இவளுக்கு நடனம் வரலைன்னு சொன்னா கேக்க மாட்டீங்களா தயவுசெய்து நீங்களாவது சொல்லுங்க. டான்ஸ் ஆடிய தீருவேன்னு அடம் பிடிக்கிறா quarantine கொடுமைகள் என்று என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement