என்ன எந்த படத்துலயும் நடிக்க விடமாட்றாங்க – எனக்கு நீங்க உதவி செய்ங்க. வீடியோ வெளியிட்ட கார்த்தி.

0
10426
karthik
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும்,அன்பும் பெற்ற சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான். இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் செம்பருத்தி சீரியலும் ஒன்று. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும், அவருக்கு ஜோடியாக ஆபிஸ் புகழ் கார்த்தியும்நடித்து வந்தனர்.

-விளம்பரம்-

இந்த சீரியல் 800 எபிசோடுகள் வெற்றிகரமாக ஓடிய நிலையில் இந்த சீரியலில் இருந்து கார்த்திக் விலகுவதாக அறிவிக்கப்பட்டது. செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்திக் வெளியேறுவதாக வெளியான தகவலை அடுத்து செம்பருத்தி சீரியல் ரசிகர்கள் பலரும் அதிருப்தி அடைந்தார்கள். தற்போது அவருக்கு பதிலாக பிரபல யூடுயூப் தொகுப்பாளரான அக்னி நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : விஷ்ணு விஷால் விவகாரத்து செய்த முதல் மனைவி இந்த ரோஜா சீரியல் நடிகரின் மகள் தான் தெரியுமா ?

- Advertisement -

கார்த்திக், செம்பருத்தி சீரியலை அடுத்து வேறு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. இருப்பினும் ‘முகிலன்’ என்ற வெப் சீரிஸ் ஒன்றில் மட்டும் நடித்து இருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடித்து இருந்தார். ஆனால், இது எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கார்த்திக்.

அந்த வீடியோவில் பேசியுள்ள அவர், என்னை எந்த படத்திலும் வேலை செய்யவிடாமல் கெடுக்கிறார்கள். அதானல் நானே ஒரு சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து படம் நடிக்க இருக்கிறேன். அதற்கு உங்களால் முடிந்த உதவிகளை அனுப்புங்கள் என்று வங்கி விவரங்களையும் கூறி இருக்கிறார். நடிகர் கார்த்தி மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் அவரது அப்பா ஒரு தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement