செம்பருத்தி சீரியல் நடிகை ஜெனிபர் தனது காதலரிடம் முதல் திருமணத்தை மறைத்ததால் இரு குடும்பத்தாருக்கு இடையே அடிதடி ஏற்பட்டுள்ளது. ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் பார்வதியாக ஷாபனாவும், ஆதியாக ஆபீஸ் கார்த்தியும் நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த சீரியலில் இருந்து விலகினார் கார்த்தி. இந்த சீரியலில் உமா என்ற கதாபத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஜெனிபர்.
இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ம் தேதி சென்னையில் ஒரு கோயிலில் வைத்து எளிமையான முறையில் ஜெனிபருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தத் திருமணம் ‘மதங்களைக் கடந்த காதல் திருமணம் என்பதும் குறிப்பிடதக்கது. அதிலும் ஜெனிபர் காதலித்து திருமணம் செய்து கொண்டது ஒரு கார் ஓட்டுநர் என்பது தான் மிகவும் ஆச்சரியம்.
ஜெனிஃபர் சரவணனை மூன்று வருடங்களுக்கு முன்னால் குடும்பத்தோடு ஒரு காரில் சென்றபோது தான் சந்தித்துள்ளார்.சரவணன் கூறிய கதை ஜெனிபர் குடும்பத்திற்கு ஏற்கனவே பிடித்துப் போய்விட சரவணனை மருமகனாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன்பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் இவர்கள் திருமணமான ஒரு சில மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் விவாகரத்துக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இந்தநிலையில் ஜெனிபர் தொடரில் பணியாற்றும் உதவி இயக்குனர் நவீன் குமாருடன் காதல் ஏற்பட்டுள்ளது.இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் ஜெனிபருக்கு ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து வழக்கு நடந்து வருவதை மறைத்ததாக கூறி நவீன்குமார் ஜெனிபர் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டு நவீன் குமாரை ஜெனிபரின் உறவினர் நவீன் குமாரை தாக்கி உள்ளார். இதனால் அவரது முகத்தில் ரத்தம் வடிந்து காயம் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்த நவீன் குமார் உறவினர்கள் மீண்டும் மாலை ஜெனிபர் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர். அப்போது இருதரப்புக்கும் அடிதடி நடந்துள்ளது.இருதரப்பிலும் கார்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக இருவரும் மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.