கார்த்தியை தொடர்ந்து செம்பருத்தி சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை. இனி அவருக்கு பதில் இந்த நடிகை.

0
6883
sembaruthi
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும்,அன்பும் பெற்ற சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான். இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் செம்பருத்தி சீரியலும் ஒன்று. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

-விளம்பரம்-
Rani - Celebrity Style in Sembaruthi Episode 1034, 2021 from Episode 1034.  | Charmboard

இந்த தொடரில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும், அவருக்கு ஜோடியாக ஆபிஸ் புகழ் கார்த்தியும்நடித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் இருந்து கார்த்தி வெளியேறி அவருக்கு பதிலாக பிரபல யூடுயூப் தொகுப்பாளர் அக்னி நடித்து வருகிறார். சீரியலில் ஏற்பட்ட சில பாலிடிக்ஸ் காரணமாக தான் கார்த்தி வெளியேறினார் என்று கூறப்பட்டது.

- Advertisement -

தற்போது கார்த்தி தனது ரசிகர்களிடன் பண உதவி பெற்று புதிய படம் ஒன்றை எடுத்து வருகிறார். கார்த்தி சென்றதில் இருந்தே செம்பருத்தி சீரியல் Trpயில் சறுக்கியது. இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் மித்ரா என்ற கதாபத்திரத்தில் நடித்த பரதா நாயுடு நடித்து வந்த நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்டது போல சீரியலில் இவரது கதாபாத்திரம் நிறைவடைந்தது.

இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சின்னத்திரை நடிகை ராணி. இவர், தற்போது செம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார். இவருக்கு பதிலாக பிரபல சின்னத்திரை நடிகை உஷா எலிசபெத் நடிக்கவந்துள்ளார். இவர் பிரபல தேனிமொழி பி.எ, பாண்டவர் இல்லம், பிரியமாளவலே உள்ளிட்ட பல சீரியலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement