கடந்த ஜூலையில் திடீர் நிச்சயதார்த்தம் இந்த ஜூலையில் குழந்தை – இன்ப அதிர்ச்சி கொடுத்த செம்பருத்தி சீரியல் பிரபலம்.

0
567
kathir
- Advertisement -

வெள்ளி திரையை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை தான் மக்கள் அதிகம் ரசித்து வருகின்றனர். அந்த வகையில் அதிக ஆதரவும், அன்பும் பெற்ற சீரியலில் ஒன்று தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல். இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. பெரும் வெற்றிகண்ட இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது. மேலும், இந்த தொடரில் ஆதியின் தம்பியாக நடித்து வருபவர் கதிர். இந்த தொடரின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் முதலில் விஜேவாக இருந்தார்.

-விளம்பரம்-
Here are the lesser-known facts about Sembaruthi star VJ Kathir | The Times  of India

பின் நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆனார். இவரது அப்பா லாரி டிரைவர். அம்மா கட்டிட வேலைக்குபோனவர். அந்த சூழலில் தான் இவருடைய படிப்பை முடித்தார். பின் கோயில் விழாக்களில்நடனமாடி. பின்னர் அந்த விழா மேடைகளில் தொகுப்பாளராக இவரது வாழ்க்கையை தொடங்கினர்.அதற்குப் பிறகு தான் லோக்கல் சேனலில் ஆங்கரிங் வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பல மேடைகளில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தற்போது நடிகராக இருக்கிறார்.

- Advertisement -

லோக்கல் சேனல் ஆங்கரிங் :

மேலும், செம்பருத்தி சீரியலில் மூலம் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது. சீரியலில் நடிக்கும்போது எனக்கு ஜில் ஜங் ஜக் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கொடுத்தார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இந்த சோ போனது.பின் இந்த ஷோ முடிந்து ரெண்டு வருஷத்துக்கு பிறகு தான் ‘மாஸ்டர் தி பிளாஸ்டர்’ என்ற இவர் தொகுத்து வழங்கி இருந்தார்.

தவறிப்போன பெரிய நடிகர் படம் :

இதுகுறித்து பேசிய அவர் நான் முதல் மூன்று எபிசோடு தொகுத்து வழங்கி வந்தேன். ஆனால், எனக்கு தொடர்ந்து சீரியல் சூட்டிங் இருந்ததனால் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியவில்லை. அதனால் அந்த ஷோ விட்டு பண்ண முடியாமல் போனது. அதேபோல் நான் சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பெரிய நடிகருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த வாய்ப்பு கைநழுவி போனது.

-விளம்பரம்-

திடீர் நிச்சயதார்தம் :

நல்ல கதைக்களம் அமைந்தால் நிச்சயம் வெள்ளித்திரையிலும் நடிப்பேன். மேலும், பெஸ்ட் ஆக்டர் என்ற விருது கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. என் ஃபேமிலி இல்லை என்றால் நான் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது. என் குடும்பம் தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன் என்று கூறி இருந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் தான் இவருக்கு சிந்து என்பவருடன் திடீர் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது.

கதிருக்கு பிறந்த குழந்தை :

இதுகுறித்து தெரிவித்த அவர் லாக்டவுன் பிரச்சனை, இ-பாஸ் பிரச்சினைகள் காரணமாக நிறைய பேரை அழைக்க முடியாமல் போனது. என்னை மன்னித்துவிடுங்கள்கல்யாணத்திற்கு நிச்சயம் அனைவரையும் அழைப்பேன். ‘ என்று கூறி இருந்தார். இதை தொடர்ந்து இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்று இருந்தது. இப்படி ஒரு நிலையில் இவருக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது.

Advertisement