தமிழ் சினிமாவில் விமர்சன ரீதியாக வெற்றியடைந்து மனதில் நீங்காத திரைப்படங்களான மைனா, கும்கி, கயல் போன்ற திரைப்படங்களை இயக்கிய பிரபு சாலமன் தற்போது இயக்கியிருக்கும் திரைப்படம் செம்பி. இயக்குனர் பிரபு சாலமன் இதற்கு முன் இயக்கிய காடன், தொடரி போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தராத காரணத்தினால் இப்படம் வெற்றியடைந்தே ஆகவேண்டும் என்ற வைராக்கியத்துடன் உருவாக்கி இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது.

பழங்குடியினராக சரளா :

இப்படத்தில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை ராணி ஆச்சி மனோரமாவுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் காமெடி இளவரசியாக ஜொலித்துக் கொண்டிருக்கும் கோவை சரளா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மற்ற படங்களை போல வெறும் காமெடியாக மட்டும் இல்லாமல் தன்னுடைய நடிப்பை முழுவதுமாக மாற்றி நாம் இதுவரை பார்த்திடாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் பழங்குடியின பெண்ணாக நடித்திருக்கிறார் கோவை சரளா. இதற்கு பலரும் பாராட்டுகளை கோவை சரளாவவிற்கு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் பாருங்க : காந்தாரா நாயகியின் அடுத்த படத்தில் இப்படி ஒரு ரோலா – செம குஷியில் கன்னட ரசிகர்கள்.

செம்பி படத்தில் அஸ்வின் :

மேலும் இப்படத்தில் கோவை சரளாவுடன் அஸ்வின் குமார், தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத், முல்லை அரசி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்கள் நடித்திருக்கின்றனர். மைனா படத்தை போல பஸ் பயணத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த நிலையில் இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது.

Advertisement

படத்தில் அரசியல் :

இந்த நிலையில் செம்பு திரைப்படத்தின் முதல் ட்ரைலர் வெளியான போது படத்தின் இறுதியில் ஒரு அரசியல் வசனம் பேசப்பட்டிருக்கும். அந்த வசனத்தில் அரசியல் வாதி ஒருவர் தனக்கு தேர்தலில் ஒட்டு போட்டால் உன்னுடைய பேத்தியை டாக்டர் ஆக்குவேன் என்று கூறியிருப்பார். அதற்கு கோவை சரளாவின் பேத்தி நீ அவருக்கு ஒட்டு போட்டுவிடு என்னை அவர் டாக்டர் ஆக்கி விடுவார் என்று அவருடைய பாட்டியான வீரத்தையுடம் சொல்லியிருப்பார்.

Advertisement

நீக்கப்பட்ட வசனம் :

இதற்கு கோவை சரளா எவனுக்கு ஒட்டு போட்டாலும் டாக்டர் ஆக முடியாது, நன்றாக படித்தால் தான் டாக்டர் ஆக முடியும் என்று சொல்லியிருப்பார். இந்த வசனம் ட்ரைலரில் வந்த போதே நெட்டிசன்கள் பலரும் இது படத்தில் வருமா என கேள்வி எழுப்பிய நிலையில் படம் வெளியாகி அந்த காட்சி வரும் போது கோவை சரளா சொல்லும் அந்த வசனம் மியூட் செய்யப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது. இப்படத்தை ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் வெளியிட்டதினால் தான் அந்த வசனம் நீக்கப்பட்ட்டிருக்கிறது என்று நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement