இந்திய சினிமா உலகில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படங்களில் ஒன்று கே ஜி எஃப். இந்த படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தயாரிப்பாளர் விஜய் பிலிம்ஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தான் சமீபத்தில் வெளிவந்த காந்தாரா என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.
காந்தாரா :
இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அஜனீஷ் எஸ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரிஷப் ஷெட்டி தான் படத்தை இயக்கியும் இருக்கிறார். இந்த படம் சமீபத்தில் தான் கன்னட மொழியில் வெளியாகி இருந்தது. இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது.
குடும்பம் :
இந்த நிலையில் இப்படத்தில் லீலா என்ற வனக்காவலர் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சப்தமி கவுடா. இவர் தன்னுடைய எளிமையான நடிப்பு மற்றும் அழகினால் ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டார். மேலும் படத்தில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்கையிலும் இவர் எளிமையானவர் தான். இவர் சொந்த ஊர் கர்நாடகா மாவட்டத்தில் உள்ள பெங்களூர். இவரின் தந்தை உமேஷ் டோடி, தாயார் சாந்தா. இவருக்கும் ஒரு தங்கக்கையும் உள்ளார்.
படிப்பு :
நடிகை சப்தமி கவுடா தன்னுடைய பள்ளி படிப்பை பால்டவின் பெண்கள் உயர்நிலை பள்ளியிலும், கல்லுரிப் படிப்பை BE சிவில் படிப்பை பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியிலும் முடித்துள்ளார். மேலும் இவர் ஒரு நடிகை மட்டுமில்லாமல் தேசிய அளவிலான நீச்சல் வீராங்கனையும் ஆவர். இவர் நடித்த காந்தாரா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகும் கூட அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த வித பெரிய மாற்றமும் இல்லை. எப்போதும் போல் தன்னுடைய குடும்பத்தினுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
பேட்டியில் கூறியது :
இந்நிலையில் காந்தாரா படம் குறித்து நடிகை சப்தமி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதில் `படம் வெளியான பிறகும் கூட எல்லா வீடு வேலைகளையும் நான் இப்போதும் செய்துதான் வருகிறேன். நடிகர் ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்திற்கு நல்ல கதாநாயகியையும், அந்த முகம் படத்திற்கும் பொருந்த வேண்டும் என்பதினால் குறியாக இருந்தார். ஒரு முறை என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள என்னுடைய புகைப்படத்தை பார்த்து ஆடிஸ்சனுக்கு அழைத்திருந்தார் நானும் சென்றிருந்தேன்.
தேசிய வீராங்கனை :
நடிப்பு மற்றும் லுக் நன்றாக இருந்தது என்று கூறினார்கள். அந்த படத்தில் கன்னடத்தில் பேச வேண்டும், ஆனால் என்னக்கு கன்னடம் தெரியாது எனவே அந்த கதாபாத்திரத்திற்கான நடிப்பு மற்றும் கன்னட மொழி இவற்றை இரண்டு மாதம் கற்றுக்கொண்டேன், பின்னர் அப்படத்தில் நடிக்கும்போது புரிந்து கொள்ள முடிந்தது. என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார் சப்தமி கவுடா. ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் சிறுவயதில் இருந்தே நீச்சலில் ஈடுபாடு கொண்டவராக இருந்து பல்வேறு மாநில மற்றும் தேசிய அளவிலான விருதுகளை பெற்றிருக்கிறார் என்பது குறிபிடத்தக்கது.