என் தோற்றத்தை பார்த்துட்டு இந்த மாதிரி எல்லாம் நினைச்சாங்க – எமோஷனலாக பேசிய நடிகர் சென்ராயன்

0
60
- Advertisement -

பிரபல நடிகர் சென்ராயன் சமீபத்தில் தந்துள்ள பேட்டி தான் இப்போது வைரலாகியுள்ளது. நடிகர் சென்ராயன் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றி இப்போது மக்களுக்கு பரிச்சயமான ஒரு காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். கடந்த 2007 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தில் முக்கியமான பைக் திருடும் காட்சியில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சென்றாயன்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து சிலம்பாட்டம், ஆடுகளம், மூடர் கூடம், கொளஞ்சி, பா பாண்டி, ஸ்பைடர், வட சென்னை, அசுரன், பக்கத்துல, மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் அவர் நடித்த ‘மூடர் கூடம்’ படுத்திருக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஆனந்த விகடன் சினிமா விருதினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஒரு சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

- Advertisement -

ரியாலிட்டி ஷோஸ்:

மேலும் இவர் விஜய் டிவி நடத்திய ‘பிக் பாஸ் சீசன் 2’ வில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இவர் 84 நாட்கள் சிறப்பாக விளையாடினார். மேலும் அந் நிகழ்ச்சியின் மூலம் தனது வெகுளியான குணத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே சேர்த்தவர் சென்றாயன். அதுமட்டுமல்லாமல் இவர் விஜய் டிவி நடத்திய ‘பிபி ஜோடிகள் சீசன் 1’ ல் போட்டியாளராக பங்கு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்றாயன் பேட்டி:

அதனை தொர்ந்து நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சென்றாயன் வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களை பற்றி கூறியுள்ளார். அதில், என் தோற்றத்தை வைத்து நிறைய இடத்தில் நான் அவமானங்களை சந்தித்து இருக்கிறேன். ஒரு நாள் இரவு நேரத்தில் ரோடில் நடந்து போனபோது என்னை திருடன்னு நினைச்சுட்டு போலீஸ் புடிச்சுட்டு போய்ட்டாங்க. பின்னர், நான் பொல்லாதவன் படத்தில் நடிச்சது தெரிஞ்சு என்னை அனுப்பி விட்டுட்டாங்க என்று எமோஷனலாக கூறியுள்ளார் சென்ராயன்.

-விளம்பரம்-

சென்றாயன் குறித்து:

நடிகர் சென்ராயன் தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரில் பிறந்தவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவருக்கு சினிமா மீது மோகம் அதிகம். அதனால் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் சென்னைக்கு வந்தவர் சென்றாயன். பெரும்பாலும் இவர் நகைச்சுவை மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களில் அடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் 2014 இல் வத்தலகுண்டுவில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலில் கயல்விழி என்றவரை திருமணம் செய்து கொண்டார் இவர்.

மனைவிக்கு சர்ப்ரைஸ்:

திருமணம் ஆகி நான்கு வருஷத்திற்கு பிறகு தன் மனைவி கர்ப்பமாக இருக்கிற செய்தியை கேட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் துள்ளி குதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் சென்றாயன். கர்ப்பமாக இருக்கும் தன் மனைவி ஆசைப்பட்டார் என்று சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியம் உள்ளார் இவர். அதாவது இவர் மனைவி நீண்ட நாட்களாக சினேகா மேடத்தை பார்க்கணும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார். தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று சர்ப்ரைஸாக சினேகாவின் வீட்டிற்கு தன் மனைவியை அழைத்துச் சென்றிருக்கிறார் சென்றாயன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement