கல்யாணம் ஆகி 4 வருஷம் ஆச்சு.! இன்னும் குழந்தை இல்ல.! சென்ராயன் எடுத்த அதிரடி முடிவு.!

0
1187
Bigg-boss-sendrayan
- Advertisement -

பிக் வீட்டிற்குள் சில நாட்களுக்கு முன்னர் அனாதை ஆஷ்ரமத்தில் இருந்து சில குழைந்தைகள் அனுப்பபட்டிருந்தனர். அவர்கள் கூறிய அவர்களது சொந்த வாழ்க்கை கதைகளை கேட்டு போட்டியாளர்களும் சரி, அதனை கண்டுகொண்டிருந்த ரசிகர்களும் சரி மிகவும் மனம் நெகிழ்ந்து போனார்கள்.

-விளம்பரம்-
Sendrayan-bigg-boss
Sendrayan-bigg-boss

இந்நிலையில் நேற்று(ஜூலை 22) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடிகர் கமல் போட்டியாளர்களிடம் ‘அந்த குழந்தைகள் உங்களுக்கு என்ன கற்றுக்கொடுத்தார்கள்’ என்று கேட்டார். அதோடு குழந்தைகளை தத்தெடுப்பது குறித்து கமல் பேசிக்கொண்டிருந்த போது உடனே சென்றாயன் ‘சார் எனக்கு 4 வருசமா கொழந்த இல்ல. நீங்க அனுமதிச்சா நான் அதிலிருந்து எதாவது ஒரு கொழந்தையா தத்தெடுத்துக்கற’ என்று கூறுகிறார்/

- Advertisement -

இதனை கேட்டு மிகவும் நெகிழ்ந்து போன கமல்’அனுமதியெல்லாம் கேக்காதீங்க, உங்க மனச விட பெரிய நீதிமன்றம் உண்டா. நீங்க தத்தெடுங்க அடுத்த வருடமே உங்கள் மனைவி கர்பமாகிடுவாங்க. ஆனால், உங்களுக்கு குழைந்தை பிறந்தாலும் நீங்கள் தத்தெடுத்த பிள்ளையை மூத்த பிள்ளையாகவே வளர்க்க வேண்டும்’ என்று கூறுகிறார்.

இத்தனை வாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியிலேயே நேற்று நடந்த இந்த சம்பவம் தான் இந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற உறுப்படியான சம்பவம் என்று அனைவரும் கூறி வருகின்றனர். ஆனால்,சென்றாயன் கூறியது போல அவர் வெளியே வந்ததும் ஒரு குழந்தையை தத்தெடுத்தால் மிகவும் சந்தோசம் தான்.

-விளம்பரம்-

Kamal

அதே போல கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ், தான் வெற்றி பெற்ற பரிசு தொகையின் ஒரு பகுதியை ஆதரவற்ற குழந்தைகளின் படிப்பு செலவிற்காக வழங்குவேன் என்று கூறியிருந்தார், அதனை செய்தும் காட்டினார். ஆராவ் செய்தது போல சென்றாயனும், தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement