ஐஸ்வர்யா, சென்ராயன் சண்டையில் இதை கவனித்தீர்களா..? கிண்டல் செய்த சென்ராயன்.!

0
572
Bigg-Boss

இந்த வாரம் முழக்க ஐஸ்வர்யாவின் சேட்டைகள் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. இந்த வாரம் வீட்டின் தலைவியாகவும், ‘சர்வாதிகார ராணியாகவும் இருந்து வரும் ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பைகளை கொட்டிய போது பொறுமை காத்துவந்த சென்ராயன், தனது காபியை குப்பையில் ஊற்றியதும் கொதித்தெழுந்து விட்டார்.

senrayan

- Advertisement -

சென்ராயன் குடித்துக் கொண்டிருந்த காபீயை வாங்கி கிச்சனில் இருந்த சிங்க்கில் ஊற்றி விட்டார். இதனால் பொறுமை இழந்த சென்றாயன் ஐஸ்வர்யாவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் இருவரும் மாறி மாறி லூசு,மெண்டல் என்று திட்டிக்கொள்ள, சென்றாயன்,ஐஸ்வர்யாவை அடிக்க கை ஓங்கி விட்டார்.

இருப்பினும் ஐஸ்வர்யா தொடர்ந்து வம்பிழுத்துக் கொண்ட அப்போது சென்றாயனிடம் ‘வா அடி, வா அடி ‘ என்று கூறிகொண்டே இருந்தார்,ஐஸ்வர்யாவால் அதை சரியாக உச்சரிக்க முடியவில்லை, “வா அடி” என்ற வார்த்தை வாடி என கூற.. அதற்கு சென்ட்ராயன் ‘வாடி வாடியா ‘ என்று கிண்டல் செய்தார். மேலும், ஐஸ்வர்யா ‘நான் இங்க தான் இருக்கும்’ என்று கூறிய போது அதற்கு சென்றாயனும், ஐஸ்வர்யா கூறிய அதே தொனியில் ‘நானும் இங்க தா இருக்கும் ‘என்று மீண்டும் கிண்டலடித்தார். அவர் கூறிய அந்த தொனி ஐஸ்வர்யாவை கிண்டல் செய்தது போலவே தான் ரசிகர்களுக்கு தோன்றியது.

-விளம்பரம்-

Aishwarya

சென்ராயன் பிக் பாஸ் வீட்டில் கொஞ்சம் தரம் தாழ்த்தி தான் நடத்தப்பட்டு வருகிறார். அப்படி இருந்தும் அனைவரிடமும் மிகவும் சகசமாக பழகி வருகிறார் சென்ராயன். வயதில் சிறியவரான ஐஸ்வர்யா தன்னை கோபப்படுத்திய போதும் அவரை கிண்டல் செய்து சில வார்தைகளை சென்ராயன் பேசியதை காணும் போது சென்றாயனின் வெகுளித்தனமான குணம் தான் பிரதிபலிக்கிறது.

Advertisement