கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றிய சென்ராயன்..!பூரிக்கும் கயல்விழி..!

0
475
kayal

நடிகர் சென்ராயன் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றி இப்போது மக்களுக்கு பரிட்சயமான ஒரு காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். அதிலும் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களில் பேராதரவை பெற்று மேலும் பிரபலமடைந்தார்.

kayalvizhi

- Advertisement -

நான்கு வருஷத்துக்குப் பிறகு தன் மனைவி கர்ப்பமாக இருக்கிற செய்தி கேட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் துள்ளிக் குதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி நம் அனைவரையும் சிலிர்க்க வைத்தார் சென்றாயன். கர்ப்பமாக இருக்கும் தன் மனைவி ஆசைபட்டார் என்று சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

நான் கிட்டத்தட்ட நாலு வருஷமா சினேகா மேடத்தைப் பார்க்கக் கூட்டிட்டுப் போகச் சொல்லி அவர்கிட்ட கேட்டுட்டே இருந்தேன். எனக்குச் சினேகா மேமை ரொம்பப் பிடிக்கும். அவர் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லுவார். அப்புறம் மறந்துடுவார். நானும் விட்டுட்டேன்.

-விளம்பரம்-

திடீர்னு ஒரு நாள் நாங்க வெளியில் கிளம்பினோம். எங்கே போறோம்னு சொல்லாம சர்ப்ரைஸா சினேகா மேமுடைய வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனார் என்று மிகவும் பூரிப்புடன் கூறியுள்ளார் கயல்விழி

Advertisement