‘என் கணவரை காணவில்லை’ நடன கலைஞரின் மனைவி அளித்த புகார். கட்டி வைத்து அடித்துள்ள கொடுமை.

0
623
dancer
- Advertisement -

தன் கணவரை காணவில்லை என்று பிரபல நடனக் கலைஞரின் மனைவி அளித்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடன நிகழ்ச்சிகளில் பிரபலமான நடன கலைஞராக இருப்பவர் ரமேஷ். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்று வருகிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக ரமேஷைக் காணவில்லை என்று அவருடைய மனைவி இன்பவள்ளி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதில் அவர் கூறியிருப்பது, கடந்த 11ஆம் தேதி அன்று குமார், ரஞ்சித் , ஜெய், ராஜ்குமார் ஆகியோர் சூட்டிங் இருப்பதாக சொல்லி என்னுடைய கணவர் ரமேஷை அழைத்துச் சென்றிருந்தார்கள். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. ரமேஷின் முதல் மனைவி எனக் கூறும் சித்ரா என்பவர் தான் கடத்தி வைத்திருக்கிறார். அவர்களுடைய அடியாட்கள் மூலம் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுகிறார்கள் என்று புகாரில் இன்பவள்ளி குறிப்பிட்டிருக்கிறார்.

- Advertisement -

இன்பவள்ளி அளித்த புகார்:

இதுதொடர்பாக சென்னை புளியந்தோப்பு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து நடன கலைஞர் ரமேஷ் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய பெயர் ரமேஷ். எனக்கு நடனம் தான் உயிர். சிறுவயதிலிருந்தே நடனம் ஆடிக் கொண்டிருக்கிறேன். தனியார் தொலைக்காட்சிகளில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறேன். இன்ப வள்ளிக்கு ஏற்கனவே திருமணமாகி 3 பிள்ளைகள் இருக்கிறது.

இன்பவள்ளி குறித்து ரமேஷ் சொன்னது:

கணவர் இறந்துவிட்டார் என்னுடன் இருங்கள் என்று அவர் சொன்னார். அதனால் இருந்தேன். அப்போது எனக்கும் என்னுடைய மனைவி சித்ராவுக்கும் சண்டை. அதனால் அவருடன் இருந்தேன். ஆனால் , அவர் சைக்கோ என்பதை தெரிந்து கொண்டேன். என்னுடைய மகள் திருமணத்திற்கு கூட செல்லக்கூடாது என்று என்னை ரூமில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தினார்கள். எனக்கு பங்க் போன்று முடியிருக்கும். அதையெல்லாம் வெட்டி மத்தில் என்னை அடித்தார்கள்.

-விளம்பரம்-

ரமேஷ் அளித்த பேட்டி:

அவர்களுடைய மகன்கள், அவளும் சேர்ந்து நான் நடனம் ஆடக் கூடாது என்று கை, கால்கள் எல்லாம் அடித்து உடைத்தார்கள். என் உடம்பில் பல இடங்களில் காயங்கள் இருக்கிறது. எப்படியோ அவர்களிடமிருந்து தப்பித்து வந்து விட்டேன் என்று கூறி இருந்தார். அவரை தொடர்ந்து அவருடைய மனைவி சித்ரா கூறியிருந்தது, நானும் ரமேஷும் சிறுவயதிலிருந்தே ஒன்றாகப் வளர்ந்தோம். சிறுவயதிலிருந்தே நாங்கள் இருவரும் நடனமாடுவோம். எங்களின் நடனத்தைப் பார்த்து பலரும் காசு தருவார்கள். அப்போதிலிருந்தே என்னை எல்லோரும் தமிழ் தமிழ் என்று தான் கூப்பிடுவார்கள் அந்த அளவிற்கு சிறுவயதிலிருந்தே எங்களுடைய காதல் உருவானது.

சித்ரா அளித்த பேட்டி:

எங்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். எங்கள் வீட்டில் என்னை அடித்தார்கள், அதேபோல் ரமேஷ் வீட்டில் அவருக்கு பல கஷ்டங்கள் வந்தது. அதை எல்லாம் மீறி தான் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். இடையில் அவர் வழி மாறிப் போயிருந்தார். தற்போது அவர் மீண்டும் என்னிடமே வந்து விட்டார். எங்களுடைய பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டோம்.எனக்கு பெரிதாக ஆசை இல்லை. என்னுடைய கணவர் என்னுடன் இருந்தால் மட்டுமே போதும். வேறு எதுவும் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement