உயிர் தியாகம் செய்த தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று உதவிய செந்தில் – ராஜலட்சுமி.!

0
1548
Senthil
- Advertisement -

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமா பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதல் இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு வாரம் வியாழனன்று  அன்று புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்று கொண்டிருந்த வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 

-விளம்பரம்-

இந்த தகுத்தலில் 40 CRPF வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், இந்த தாக்குதலில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் ஆகிய இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் தமிழகமே சோகத்தில் மூழ்கியது.

- Advertisement -

உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு பலரும் உதவிகளை செய்து வருகின்றனர். சமீபத்தில் ரோபோ சங்கர் உயிரிழந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் அளித்திருந்தார். இந்த நிலையில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமடைந்த செந்தில் மற்றும் ராஜலக்ஷ்மி தம்பதியினர்
உயிர் நீத்த அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த ராணுவ வீரர் சிவசந்திரன் குடும்பத்தினரை நேரில் சந்தித்தனர்.

நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவர்களின் குடும்பத்திற்கு
50000 நிதி உதவி அளித்தனர். சிவச்சந்திரனின் நினைவிடத்திற்கு சென்ற செந்தில் மற்றும் ராஜலக்ஷ்மி மலர் தூவி கண்கலங்கி வீரவணக்கம் செலுத்தினார். இவர்களின் இந்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

-விளம்பரம்-

Advertisement