Autism இல்ல, அவளுக்கு Echolalia என்ற பிரச்சனை – தன் மகள் குறித்து நடிகர் அமித் பார்கவ் சொன்ன அதிர்ச்சி தகவல்

0
441
- Advertisement -

நடிகர் அமித் பார்கவ் மகளுக்கு இருக்கும் பிரச்சினை குறித்து தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக அமித் பார்கவ் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். 2010ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த ‘சீதே’ தொடரின் முலம் தான் இவர் சின்னத்திரையில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பின் இவர் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த ‘கல்யாண முதல் காதல்’ வரை என்ற தொடரில் நடித்திருந்தார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. அதோடு இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. அதனை அடுத்து இவர் நெஞ்சம் மறப்பதில்லை, மாப்பிள்ளை போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்.

- Advertisement -

அமித் பார்கவ் குறித்த தகவல்:

கடைசியாக இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இருந்த ‘திருமதி ஹிட்லர்’ என்ற தொடரில் நடித்திருந்தார். அதற்குப் பின் இவர் சீரியலில் நடிக்கவில்லை. பின் சினிமா பட வாய்ப்புகள் கிடைத்தவுடன் இவர் வெள்ளித் திரைக்கு சென்று விட்டார். இவர் என்னை அறிந்தால், எனக்குள் ஒருவன், மிருதன், குற்றம் 23, சார்லி சாப்ளின் 2 , சக்ரா, அரண்மனை 3, மாருதி நகர் காவல் நிலையம் போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அமித் பார்கவ் குடும்பம்:

தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிகராக மட்டுமில்லாமல் டப்பிங் கலைஞராகவும், தொகுப்பாளராகவும் இருக்கிறார். இதற்கிடையில் நடிகர் அமித் பார்கவ் அவர்கள் சீரியல் நடிகை சிவரஞ்சனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் இருக்கிறது.

-விளம்பரம்-

அமித் பார்கவ் பேட்டி:

அமித் அவர்கள் தன்னுடைய குடும்பத்துடன் இருக்கின்ற புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், அமித் பார்கவ் தன்னுடைய மகள் குறித்து சொன்ன விஷயம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் அவர், என்னுடைய மகளுக்கு ஆட்டிசம், மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற பிரச்சனை எல்லாம் கிடையாது. இதை நாங்கள் மருத்துவமனையிலும் பரிசோதித்து விட்டோம். என்னுடைய மகளுக்கு Echolalia என்ற பிரச்சினை இருக்கிறது.

மகள் குறித்து சொன்னது:

இது நாம் சொல்லும் சில விஷயத்தை சீக்கிரமாகவே புரிந்து கொள்ள முடியாது. அவ்வளவுதான் மற்றபடி என் மகள் நன்றாகத்தான் இருக்கிறார். நான் அவளுடைய போக்கிலேயே விட்டு விட்டேன். அவளுக்கு நான் பிரஷர் கொடுக்க விரும்பவில்லை. அவளுக்கு என்ன தோணுதோ அதை செய்ய விடுகிறேன் என்று பேசி இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள், உங்கள் மகள் சீக்கிரமாகவே குணமடைந்து விடுவார், வருத்தப்படாதீர்கள் என்றெல்லாம் ஆறுதலாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement