படத்திற்காக சீரியலில் இருந்து விலகிய பிரஜன், இப்படி ஒரு கதையை கேட்டு தானா ? ஹீரோயின் யார் பாருங்க.

0
415
prajin
- Advertisement -

சினிமா வாய்ப்பிற்காக சீரியலில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது தன் படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் பிரஜன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன தம்பி தொடர் மூலம் இல்லத்தரசிகள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் பிரஜன். சீரியலில் மட்டுமல்லாது சா பூ திரி, மணல் நகரம், பழைய வண்ணார் பேட்டை, ஆண்தேவதை போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is nsrn-1024x523.jpg

கடைசியாக இவர் மலையாளத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து இருந்த லவ் ஆக்சன் டிராமா என்ற படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இப்படி என்னதான் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது சின்னத்திரை சீரியல்கள் தான். இவர் 2005ஆம் ஆண்டு வெளிவந்த இது ஒரு காதல் கதை என்ற சிறிய மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

- Advertisement -

பிரஜன் நடித்த சீரியல்கள் :

அதனைத் தொடர்ந்து ப்ரஜின் பெண், அஞ்சலி, காதலிக்க நேரமில்லை, கோகுலத்தில் சீதை போன்ற பல தொடர்களில் நடித்து இருந்தார்.பின் சிறிது காலம் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றவுடன் மீடியாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டிருந்தார். பின் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சின்ன தம்பி என்ற சீரியலின் மூலம் மீண்டும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

சீரியலில் இருந்து விலகிய பிரஜன் :

அதனைத் தொடர்ந்து இவர் அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு தான் இந்த சீரியல் முடிவடைந்தது. இப்படி ஒரு நிலையில் இவர் வைதேகி காத்திருந்தாள் தொடரில் நடித்து வந்தார். நன்றாக சென்று கொண்டு இருந்த இந்த சீரியலில் இருந்து திடீரென வெளியேறுவதாக அறிவித்தார் பிரஜன். இதுகுறித்து தெரிவித்த அவர், சீரியலில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று எண்ணி தான் கமிட்டானேன். ஆனால், பட வாய்ப்புகள் பல வந்து இருக்கிறது. அதனால் சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

டபுள் ஹீரோ சப்ஜெக்ட் :

இந்த படங்கள் ஏற்கனவே கமிட் ஆனவை என்பதால் சீரியல் மற்றும் படங்களின் படப்பிடிப்பிற்கு தேதி கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் சீரியல் இருந்து விலக இருக்கிறேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் நடிக்க இருக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றுள்ளது. ஸ்ரீகிருஷ்ணா பிலிம் புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S.V.சூரியகாந்த் தயாரிக்கும் இந்த படத்தில் பிரஜனுக்கு ஜோடியாக ரஷ்மி நடிக்கிறார். மேலும், ஜெயபிரகாஷ், ராஜ்கபூர், ‘பருத்தி வீரன்’ சுஜாதா, ஷோபராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர். அதே போல ஆஜீத் நாயக் இரண்டாம் நாயகனாக நடிக்கிறார்.

படத்தின் கதை :

இதுவொரு அரசியல் கலந்த கிரைம் திரில்லர் கதையின் அடிப்படையில் உருவாகும் திரைப்படம். தவறான அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தால்  சாமானிய மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்ற முக்கியமான விஷயத்தை இதில் சொல்ல இருப்பதாகவும், இணை பிரியாத இரண்டு நண்பர்கள் ஒரு அரசியல் வாதியின் சூழ்ச்சியில் சிக்குகிறார்கள். அதிலிருந்து எப்படி மீண்டார்கள்..? இறுதியில் அவர்களது நட்பு என்னவானது என்பதுதான் இந்தப் படத்தின் கதை என்றும் படத்தின் இயக்குனர் இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் கென்னடி இருவரும் கூறி இருக்கின்றனர்.

Advertisement