என்கிட்ட வேற எதையும் எதிர்பார்க்காமல் திறமையை பார்த்தால் கண்டிப்பாக நடிப்பேன்- மனம் திறந்த ஜோவிதா லிவிங்ஸ்டன்

0
389
- Advertisement -

கேரியர் குறித்து மனம் திறந்து நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ஜோவிதா லிவிங்ஸ்டன். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பூவே உனக்காக சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அஹோடு தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவரான லிவிங்ஸ்டன் மகள் தான் ஜோவிதா லிவிங்ஸ்டன்.

-விளம்பரம்-

இவர் முதலில் கலாசல் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். இந்த படத்தில் அம்பிகாவின் மகன் தான் நாயகனாக நடித்து இருந்தார். ஆனால், இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. இதன் பின்னர் தான் இவர் பூவே உனக்காக தொடரில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வந்தார். இந்த தொடர் மூலம் இவருக்கு ஏகப்பட்ட பிரபலம் கிடைத்தது. பின் இடையில் இவர் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

- Advertisement -

ஜோவிதா லிவிங்ஸ்டன் குறித்த தகவல்:

காரணம், தனது உயர் கல்வி படிப்பை தொடருவதற்காக இந்த சீரியலில் இருந்து விலகுவதாக ஜோவிதா லிவிங்ஸ்டன் கூறி இருந்தார். இவரை தொடர்ந்து இந்த கதையில் பல மாற்றங்கள் நடந்தது. அதன் பின் யாருக்கும் அறிவிக்காமலே இந்த சீரியலை முடித்து விட்டார்கள். இதை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த அருவி என்ற தொடரில் ஹீரோயினியாக ஜோவிதா லிவிங்ஸ்டன் நடித்திருந்தார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்திருந்தது.

ஜோவிதா பேட்டி:

சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிவடைந்து இருக்கிறது. இந்நிலையில் நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன் பேட்டியில், அருவி சீரியல் எனக்கு ப்ரொபஷனலாக நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறது. கேமரா முன்னாடி நிற்பது என்பது வேறு உலகம். அங்கு நிறைய பேருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதே மாதிரி பர்சனல் அட்டாக் கூட நிறைய நடந்தது. அதெல்லாம் கடந்து இன்னைக்கு ரொம்ப மெச்சூர் ஆகி இருக்கிறேன். அப்பா சினிமாவில் மட்டும் தான் நடித்திருக்கிறார். பலர் என்னிடம் நீங்க ஏன் சீரியலில் நடிக்கிறீங்க? சினிமா பக்கம் ஏன் இன்னும் வரல? என்று கேட்கிறார்கள். எனக்கும் சினிமாவில் வாய்ப்பு கண்டிப்பாக வரும்.

-விளம்பரம்-

சினிமா நிலைமை:

எல்லாத்துக்கும் சரியான நேரம் வரும். சினி ஃபீல்டு பொருத்தவரைக்கும் சில இயக்குனர்கள், ப்ரொடியூசர்கள் திறமையை மட்டும் வைத்து வேறு எதையும் எதிர்பார்க்காமல் இருந்தால் இங்கு திறமையுள்ள பல பேர் மேலே வரமுடியும். எல்லா இயக்குனர்களும் நான் சொல்லவில்லை. சிலர் என்கிட்ட வேற எதையும் எதிர்பார்க்காமல் என் திறமையை மட்டும் பார்த்து எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நான் கண்டிப்பாக சினிமா துறைக்குள் வருவேன். எனக்கு ஒரு படத்திலாவது நடிக்கணும் என்று தான் ஆசை. அதுவும் நான் நடித்தால் ஹீரோயினியாக தான் நடிப்பேன் என்றெல்லாம் சொல்லவில்லை. நல்ல கதாபாத்திரம் பண்ணனும் அவ்வளவுதான். சினிமாவில் டிக் டாக் மூலமாக வருபவர்களுக்கு எல்லாம் வாய்ப்பும் மரியாதையும் இருக்கு.

சினிமா குறித்து சொன்னது:

சீரியலில் இருந்து வருபவர்களை சீரியல் ஆக்டர் என்று தான் சொல்லுவார்கள். அது என்ன சீரியல் ஆக்டர்? சீரியலும் படம் மாதிரி தானே, சீரியலும் படமும் எந்த வகையிலும் குறைந்தது கிடையாது. ஏன் அப்படி சில இயக்குனர்கள் நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. சிவகார்த்திகேயன் சார், ஷாருக்கான் எல்லாம் டிவிலிருந்து வந்தவர்கள் தானே. நான் ஒர்க் பண்றது அப்பாவுக்கு பிடிக்கவில்லை. என் விருப்பத்தை மீறி அவர் எதுவும் பண்ண மாட்டார். மீடியாவில் அவர் பட்ட கஷ்டங்களை என்னிடம் சொல்லியிருக்கிறார். அதனால் தான் இது எனக்கு வேண்டாம் என்று அவர் சொன்னார். ஆனால், இவ்வளவு கஷ்டம் இருக்குமா என்று உள்ள வந்த பிறகுதான் எனக்கு தெரிந்தது. நிறைய பேர் என்னை அவமானப்படுத்தி இருக்காங்க, மரியாதை குறைவா நடத்தி இருக்காங்க அவங்க எல்லோருக்கும் நன்றி சொல்லிக்க விரும்புகிறேன். அவர்களால் தான் நான் கான்ஃபிடன்ஸ் ஆகவே மேலே ஏறி கொண்டு வருகிறேன் என்று பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்

Advertisement