86 கிலோ டூ 63 கிலோ – வெயிட் லாஸ் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை.

0
5312
kruthika
- Advertisement -

பொதுவாகவே சின்னத்திரையில் வாய்ப்பு கிடைப்பது எளிதாக இருந்தாலும் அதை நிரந்தரமாக தக்கவைப்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான். பல நடிகர்கள் ஒரு சேனலில் மட்டும் நடிக்காமல் சேனல் விட்டு சேனல் மாறி நடித்து வந்தாலும் தங்களுடைய சின்னத்திரை பயணத்தை தொடர்ந்து நேர்த்தியாக செய்து கொண்டு வருவதற்கு ஒரு தனித்திறமை வேண்டும். அந்த வகையில் பல ஆண்டுகாலமாக தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார் நடிகை கிருத்திகா. இவர் தன்னுடைய 15 வயதிலேயே நடிப்பு திறமையை தொடங்கி விட்டார்.

-விளம்பரம்-

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் சீரியல்களில் ஒன்றான பாண்டவர் இல்லம் சீரியலில் ரேவதி என்ற கதாபாத்திரத்தில் கலக்கி கொண்டு இருக்கிறார். இவர் முதன்முதலாக பத்தாம் வகுப்பு படிக்கும்போது தான் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். இவர் ஆண்டான் அடிமை, பேசாத கண்ணும் பேசுமே படத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு இவர் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார்.

இதையும் பாருங்க : பரீனா நடத்திய போட்டோ ஷூட், தொடர்ந்து வந்த நெகடிவ் கமெண்ட்டுகளுக்கு அவர் கொடுத்துள்ள பதில்.

- Advertisement -

இவரின் முதல் சீரியல் மெட்டி ஒலி தான். இதில் அருந்ததி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் ஆனந்தம், ஆடுகிறான் கண்ணன், கணவருக்காக, செல்லமே, முந்தானை முடிச்சு,சின்னத்தம்பி போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்தார். பெரும்பாலும் இவருக்கு சீரியலில் வில்லி கதாபாத்திரம் தான் கொடுக்கப்படும். இவர் தனக்கு கொடுக்கும் கதாபாத்திரத்தை சிறந்த முறையில் நடத்து கொடுப்பார். சீரியல் மட்டும் இல்லாமல் இவர் நிறைய ரியாலிட்டி ஷோ ,டன்ஸ், காமடி ஷோ என எல்லா இடத்திலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும், திருமணத்திற்கு பிறகு பெண்கள் குண்டாவது இயல்பு என்றாலும் அதை சீரியசாக எடுத்துக்கொண்டு கொண்டவர் நடிகை கிருத்திகா. இவர் 86 கிலோவிலிருந்து 63 கிலோ வரை உடல் எடையை குறைத்து பலருக்கும் ஆச்சரியத்தை தந்தார். மேலும், இவர் தன்னுடைய வெயிட் லாஸ் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். கிருத்திகாவின் கடின உழைப்பால் சின்னத்திரையில் இளம் நாயகியாக திருப்பவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement