நிறைமாத கர்ப்பிணியான ரித்திகாவுக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு- வைரலாகும் புகைப்படங்கள், குவியும் வாழ்த்துக்கள்

0
306
- Advertisement -

பிரபல சீரியல் நடிகை ரித்திகாவின் வளைகாப்பு புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ‘ராஜா ராணி’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி இருந்தார் ரித்திகா. அதன் பின்னர் இவர் சிவா மனசுல சக்தி, சாக்லேட், திருமகள் என்று பல சீரியல்களில் நடித்திருந்தார். இருந்தாலும், இவர் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தான் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானார்.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. குடும்பப் பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் தான் ரித்திகா நடித்திருந்தார்.

- Advertisement -

ரித்திகா குறித்து:

மேலும் இவர் தொகுப்பாளினி, நடனம், பாடகர், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் குக்கிங் ஷோ என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். அதோடு ரித்திகா 4ஜி என்ற குறும்படத்திலும் நடித்திருக்கிறார். குறிப்பாக, கடந்த 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரித்திகாக்கு ஒரு பெரிய புகழை தேடி தந்தது என்று சொல்லலாம். இதற்கிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு ரித்திகா தமிழ்ச்செல்வி விஜய் டிவியில் பணியாற்றிய வினு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ரித்திகா திருமணம்:

ரித்திகா திருமணம் செய்து கொண்ட வினு என்பவர் விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றி வருகிறார். அதோடு, ரித்திகாவின் கணவர் ஒரு தொழிலதிபர் எனவும் கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின் பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து நடித்த இவர், திடீரென்று சீரியல் இருந்து விலகிவிட்டார். ஆனால், ரித்திகா சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். அது மட்டுமல்லாமல், தனது வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு தருணங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

ரித்திகா கர்ப்பம்:

அந்த வகையில் சமீபத்தில் தான் ரித்திகா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இதை அடுத்து ரசிகர்கள் பலருமே அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அதனைத் தொடர்ந்து ரித்திகா தன் கணவருடன் சேர்ந்து பிரக்னன்சி போட்டோஷூட் நடத்தி இருந்தார். அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கூட இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ரித்திகாவுக்கு வளைகாப்பு நடந்திருக்கிறது.

ரித்திகா வளைகாப்பு:

இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் பாடகர் அஜய் கிருஷ்ணா, நடிகர் ஸ்ரீதேவி அசோக்குமார், நடிகை அம்மு அபிராமி, நடிகை ஜனனி ஆகியோர் கலந்து கொண்டு ரித்திகாவை வாழ்த்தியிருக்கிறார்கள். குறிப்பாக நடிகை அம்மு அபிராமி தன்னுடைய காதலனான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திவ் மணியுடன் ரித்திகா வளைகாப்பில் பங்கேற்றுள்ளார். தற்போது இந்த வளைகாப்பு புகைப்படங்களை பாடகர் அஜய் கிருஷ்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் ரித்திகாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement