சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருப்பவர் நடிகை ஷபானா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘செம்பருத்தி’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் ஷபானா. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர்.
மேலும், இந்த சீரியலில் ஹீரோவாக ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ், நாயகியாக பார்வதி கதாபாத்திரத்தில் ஷபானா நடித்து இருந்தார். இவர் மும்பையை சேர்ந்தவர். இவர் 2016 ஆம் ஆண்டு முதல் தான் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார். இதனிடையே ஷபானா– ஆர்யன் இருவரும் காதலித்து வந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இவர்கள் திருமணத்திற்கு ஷபானா-ஆர்யன் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை.
ஆர்யன் – ஷபானா காதல் :
காரணம், ஆர்யன் இந்து, ஷபானா முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். இதனால் இவர்களுடைய திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால் தான் இவர்கள் அவசர அவசரமாக நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும், இவர்களது திருமணம் இந்துமத முறைப்படி நடந்தது. திருமணத்திற்கு பிறகும் இருவரும் தங்களின் கேரியலில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘மீனாட்சி பொண்ணுங்’க என்ற சீரியலில் ஹீரோவாக ஆர்யன் நடித்து வருகிறார்.
ஆர்யன்- ஷபானா நடிக்கும் சீரியல்கள்:
அதே போல் ஷபானா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘மிஸ்டர் மனைவி’ என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்த இருந்தார். இந்த சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து தற்போது வரை நன்றாக சென்று கொண்டிருக்கின்றது. பின் திடீர் என்று இந்த சீரியலில் இருந்து நடிகை ஷபானா விலகி இருந்தார். இது குறித்து பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதற்கு ஷபானா, மிஸ்டர் மனைவி சீரியலில் அஞ்சலியாக நடித்தது சந்தோஷமாக இருக்கிறது.
சீரியலில் விலக காரணம்:
இந்த சீரியலில் இருந்து விலகுவது கஷ்டமாகத்தான் இருக்கிறது. நன்றாக யோசித்த பிறகு தான் இந்த முடிவை எடுத்தேன். புது ப்ராஜெக்ட்டில், நல்ல கதாபாத்திரத்துடன் உங்களை சந்திக்கிறேன் என்று கூறியிருந்தார். தற்போது ஷபானா புதிய தொடரில் கமிட் ஆகி இருக்கிறார். ஆனால், அந்த சீரியல் குறித்து விவரம் வெளியாகவில்லை. அதோடு ஷபானா, விக்ரம் பிரபு நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷபானா பதிவு:
இந்த நிலையில் ஆர்யன் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ஆர்யன்- ஷபானா இருவருமே காதலித்த போது யாருக்கும் தெரியாமல் ரகசியமாக எடுத்த புகைப்படத்தை தான் தற்போது ஆர்யன் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்த ஷபானா, இதை இப்பவே டெலிட் பண்ணுங்க என்று கமெண்ட் போட்டு இருக்கிறார். ஆனால், ஆர்யன் எதையுமே டெலிட் செய்யவில்லை. இதை பார்த்த நெட்டிசன்கள், எதற்கு டெலிட் செய்ய சொல்கிறீர்கள்? உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதே, இன்னும் ஏன் பயப்படுகிறீர்கள் என்று கேட்டு வருகிறார்கள்.