சொகுசு கார் வாங்கிய சின்னத்திரை பிரபலங்களின் பட்டியலில் சேர்ந்த சீரியல் நடிகை – விலையை எவ்ளோ தெரியுமா ?

0
368
saranya
- Advertisement -

சின்னத்திரையில் உள்ள பிரபலமான நடிகைகளில் ஒருவராக சரண்யா திகழ்ந்து வருகிறார். இளசுகள் மனதை கொள்ளை அடித்த நடிகைகளில் இவரும் ஒருவர். ஆரம்பத்தில் நடிகை சரண்யா கலைஞர் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருந்தார். அதன் பின்னர் ராஜ் தொலைக்காட்சியில் பணியாற்றினார். ஆனால், அந்த தொலைக்காட்சியில் இரண்டு மாதங்கள் மட்டுமே தான் இருந்தார். பின்னர் ஜீ தமிழ், புதிய தலைமுறை போன்ற பல தொலைக்காட்சிகளில் செய்தி நிருபராக பணியாற்றினார். மேலும், இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்திலும் நடித்து உள்ளார். பின் இவர் சில படங்களில் நடித்து உள்ளார். ஆனால், சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார்.

-விளம்பரம்-
Serial Actress Sharanya Turadi Latest Instagram Photo

இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடித்து இருந்தார். பின் சன் தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட ரன் என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், சரண்யா இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். அதன் பின்னர் இவர் ஆயுத எழுத்து சீரியலில் கமிட் ஆனார். இவருக்கு முன்பாக அந்த தொடரில் ஸ்ரீத்து கிருஷ்ணன் தான் நடித்து வந்தார். அவர் விலகிய பின் சரண்யா இந்த தொடரில் கமிட் ஆனார். ஆனால், இந்த சீரியலும் திடீரென்று நிறுத்தப்பட்டது. பின்னர் கிட்டத்தட்ட இவர் ஓராண்டுகள் எந்த சீரியலிலும் நடிக்காமல் தான் இருந்தார்.

- Advertisement -

சரண்யா நடிக்கும் சீரியல்கள்:

இப்படி ஒரு நிலையில் தான் சமீபத்தில் விஜய் டிவியில் துவங்கப்பட்ட ‘வைதேகி காத்திருந்தாள்’ தொடரில் மீண்டும் நடிக்க வந்தார் சரண்யா. இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக பிரஜன் நடித்து வந்தார். ஆனால், அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவே சீரியலில் இருந்து விலகினார். பின் அவருக்கு பதில் முன்னா நடித்து வந்தார். மேலும், 50 எபிசோடுகளை கடந்த இந்த சீரியல் சமீபத்தில் திடீரென்று நிறுத்தப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டது குறித்து சரண்யா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவு போட்டு இருந்தார்.

Vaithegi Kathirunthal Saranya | வைதேகி காத்திருந்தாள் சரண்யா

சீரியல் நிறுத்தப்பட்டதற்கு சரண்யா பதிவு:

அதில், இந்த கஷ்டமான நேரத்தில் அமைதியாக இருக்க விரும்புகிறேன். கடினமான காலத்தில் எனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு எனது நன்றிகள். இப்போது மிகவும் கஷ்டமான காலத்தை சந்தித்து வருகிறேன். மிகவும் உதாசீனப்படுத்தும் போது தான் மிகவும் வலிக்கிறது. கூடுதல் பலத்துடன் விரைவில் மீண்டு வருவேன். எதுவும் என்னை சிதைக்க முடியாது என்று கூறி இருந்தார். இவரின் பதிவிற்கு பலரும் ஆறுதலாக கமெண்ட் செய்து இருந்தார்கள். இதனைத்தொடர்ந்து சரண்யா வேறு எந்த சீரியலும் கமிட்டாகவில்லை.

-விளம்பரம்-

சரண்யா வாங்கிய புது கார்:

இருந்தாலும் இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். ஏதாவது ஒரு ரில்ஸ் விடியோ, புகைப்படம் என்று பதிவிட்டு வருவார். இந்த நிலையில் தற்போது சரண்யா புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அது என்னவென்றால், தற்போது சரண்யா துராடி அவர்கள் ஒரு சொகுசு காரை வாங்கியிருக்கிறார். அது பிஎம்டபுள்யூ கார். தற்போது இந்த கார் உடனிருக்கும் போட்டோவை தான் சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர், புது காதல் கதை தொடங்குகிறது. எங்கள் குடும்பத்துக்கு புது உறுப்பினரை வரவேற்கிறோம் என்று பதிவிட்டிருக்கிறார்.

சரண்யா வாங்கிய காரின் விலை:

தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் சின்னத்திரை பிரபலங்களான ஆலியா மானசா, மணிமேகலை, ஈரோடு மகேஷ், ரம்யா பாண்டியன் உட்பட பலரும் சொகுசு கார் வாங்கி இருக்கிறார்கள். இந்த லிஸ்டில் தற்போது சரண்யா துராடி சேர்ந்து உள்ளார். அதிலும் இவர் வாங்கிய BMW X5 என்ற காரின் விலை சென்னையில் கிட்டத்தட்ட ஒரு கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement