தற்போது இருக்கும் காலகட்டத்தில் சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகளும் ரசிகர் மத்தியில் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே வைத்து வருகின்றனர். அதனால் சின்னத்திரை நடிகைகள் எது செய்தாலும் அது பேசு பொருளாக மாறிவிடுகிறது. இதனால் ஒரு சில சமயங்களில் சின்னத்திரை பிரபலங்கள் சர்ச்சையிலும் சிக்கிவிடுகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அஜித்தின் வலிமை படம் குறித்து பேசி அஜித் ரசிகர்களால் தொல்லைகளை சந்தித்து வருபவர் சின்னத்திரை சீரியல் நடிகை ஸ்ரீநிதி.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7C உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் குழந்தை பருவத்தில் இருந்தே பல சீரியல்களில் நடித்து வருபவர். தற்போது இவர் நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான வலிமை படம் பார்த்த ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
இதையும் பாருங்க : ஏன் இப்படி பண்றீங்க, என் இன்ஸ்டா IDய கூட மாத்திட்டேன் – மன வேதனையில் கோபி வெளியிட்ட வீடியோ.
வலிமை படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீநிதி :
அந்த வகையில் சீரியல் நடிகை ஸ்ரீநிதியும் வலிமை படத்தை பார்த்து கமெண்ட் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் வலிமை படத்தில் ஒரு சின்ன ரோலில் ஸ்ரீநிதியின் நெருங்கிய தோழி சைத்ரா ரெட்டி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், ஸ்ரீநிதி இடம் மீடியாக்காரர்கள் வலிமை படம் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார்கள். அதற்கு ஸ்ரீநிதி கூறியது, அஜித் சாரை நான் நேரில் கூட பார்த்துவிடுவேன். வலிமை படம் பார்க்க பொறுமை வேண்டும். ஆனால், எனக்கு பார்க்க பொறுமை இல்லை.
கொலை மிரட்டல் விடுத்த அஜித் ரசிகர்கள் :
படம் எப்படி இருக்குனு நீங்களே போய் பாருங்கள். ரொம்ப கொடுமையாக இருக்கிறது. அஜித் சார் கியூட்டாக நடித்திருக்கிறார். ஆனால், படம் ஓடுவதை விட அதிகம் பைக் தான் ஓடுகிறது என்று கூறினார். இப்படி இவர் கூறி இருந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது. இதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர். அதிலும் சிலர் இவருக்கு கொலை மிரட்டலும் விட்டுவருவதாக கூறி இருந்தார்.
சிம்பு குறித்து ஸ்ரீநிதி :
இப்படி அஜித் ரசிகர்களால் படாத பாடு பட்ட ஸ்ரீநிதி தற்போது சிம்பு குறித்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீநிதி தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘ஒருநாள் அனைவருக்கும் திருமணம் ஆகியிருக்கும், நானும் சிம்புவும் மட்டும் தான் மீதம் இருப்போம்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு ஒரு ரசிகர் ’நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமே? என கேள்வி எழுப்பிய போது அதற்கு ’செய்துகொள்ளலாம் தான், நல்ல ஐடியா தான், ஆனால் எனக்கு என்று ஒரு ஆள் இருக்கிறதே’ என்று பதில் அளித்து இருந்தார்.
இரவில் சிம்பு வீட்டின் முன் தர்ணா :
திடீரெனெ சிம்பு வீட்டின் முன்பு அமர்ந்து சிம்புவை கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.இதனை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்,மேலும் அந்த பதிவில் ,என்னால நம்ப முடியல எனக்காக சிங்கிள் ஆ இருந்துருக்காரு,பாத்துட்டு இருக்குறவங்க எங்களை சேர்த்து வைங்க,லேட்டா தான் புரிஞ்சது,இன்னோருத்தர நான் கல்யாணம் பண்ண மாட்டேன் ,ஜல்லிக்கட்டுக்கு மட்டும் போராட்டம்,லவ்வுக்கு போராட்டம் இல்லையா என கூறி அவர் வீட்டு முன்னாள் அமர்ந்து போராட்டம் செய்துவருவதாக கூறியுள்ளார்.