நல்லா நடிச்சாலும் அசிங்கமா திட்றீங்க, என் இன்ஸ்டா IDய கூட மாத்திட்டேன் – மன வேதனையில் கோபி வெளியிட்ட வீடியோ.

0
440
gopi
- Advertisement -

மனவேதனையுடன் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி பதிவிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், அவரின் கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா, வேலு லட்சுமணன், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலை இயக்குநர் டேவிட் என்பவர் இயக்கி வருகிறார். மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக பாக்கியலட்சுமி திகழ்கின்றது.

-விளம்பரம்-
gopi

இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு வேலை இருக்க வேண்டும், பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை உணர்த்துகிறது. தற்போது இந்த சீரியலில் கோபி இரண்டாவது திருமணம் செய்ய போகிறார். இந்த உண்மை எழிலுக்கு தெரிய வருமா? பாக்கியா கணவர் ராதிகாவிடம் எப்போது மாற்றிக்கொள்வார்? என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : தியேட்டர் வாசலில் ஒரு உருட்டு ட்விட்டரில் ஒரு உருட்டு – நெஞ்சுக்கு நீதி படம் குறித்து காயத்ரி ரகுராமின் இரட்டை வேஷம்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி ஆகிய இரு குடும்பங்களின் மெகா சங்கமம். பாக்கியா மாமனாரின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு இரு குடும்பங்களும் சந்தித்திருக்கிறது. அப்போது மூர்த்தி-தனம் இருவருக்கும் கோபியின் உண்மை முகம் தெரிய வருகிறது. இதனால் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் கோபி கேரக்டரில் நடித்து ரசிர்களிடைய அதிகம் ரீச் ஆனவர் சதீஷ். குடும்ப இல்லத்தரசிகள் பலரும் கோபி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

பாக்கியலட்சுமி சீரியல் கதை:

கோபி பாக்கியாவை ஏமாற்றி ராதிகாவுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருப்பதனால் மக்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த பேட்டியில் கூட பலரும் கோபியை கண்டித்துப் பேசியிருந்தார்கள். அந்த அளவிற்கு இந்த தொடரின் மூலம் சதீஸ் மக்களின் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். சதீஷை பாக்யலக்ஷ்மி சீரியல் மூலம் தான் பலருக்கும் தெரியும். ஆனால், இதற்கு முன் சதீஸ் பல தொடர்களில் நடித்து இருக்கிறார். இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் மின்சாரப்பூவே படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் . அதனை தொடர்ந்து இவர் ஏராளமான படங்களில் நடித்தார்.

-விளம்பரம்-

நடிகர் சதீஷின் திரைப்பயணம்:

பின் இவர் சூலம், கல்யாண பரிசு 2, ஆனந்தம், திருமதி செல்வம், வம்சம், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், குலதெய்வம், பொன்னூஞ்சல் போன்ற பல நாடகங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் மாடலிங் செய்தும், பல விளம்பரங்களில் நடித்தும் இருக்கிறார். மேலும், சதீஸ் சீரியல்களில் நடித்து வந்தாலும் வெள்ளித்திரையிலும் அவ்வபோது படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் இவருக்கு மிகப் பெரிய பிரபலத்தை உருவாக்கியது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஸ் தன்னுடைய இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நன்றாக நடித்தாலும் தப்பு, நடிக்காவிட்டாலும் தப்பு.

gopi

மன வேதனையில் கோபி சொன்னது:

நிறைய பேர் என்னை திட்டி மெசேஜ் போடுகிறார்கள். அதையெல்லாம் அழித்து விட்டேன். இப்போ மறுபடியும் தொடங்கியிருக்கிறார்கள். கடவுள் எனக்கு நிறைய திறமை கொடுத்திருக்கிறார். அதை நான் வெளியே காண்பித்தாலும் தப்பு. சத்தியமா வாழ்க்கை பத்தி புரியலைங்க, கொடுத்த வேலையை நான் ஒழுங்காக செய்கிறேன். அந்த நம்பிக்கையில் வாழ்க்கை ஒடிட்டு இருக்கு. ஏன் இப்படி திட்டுகிறார்கள் என்று புரியவில்லை. சீரியலில் எனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். அதற்காக என்னை பலரும் கேவலமாக அசிங்கமாக திட்டுகிறார்கள். ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று மனவேதனையுடன் கோபி கூறி பதிவிட்டிருக்கிறார்.

Advertisement