சத்தமில்லாமல் ஆல்யா மானசாவின் முன்னாள் காதலரின் காதலியும், நடிகையுமான சுபிக்ஷாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் ஆல்யா மானசா. இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பு மானஸ் என்பவரை காதலித்தார். மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் தான் இவர்கள் இருவருமே மக்கள் மத்தியில் அறியப்பட்டார்கள். இந்த நிகழ்ச்சியின் போது இவர்கள் இருவருமே உயிருக்கு உயிராக காதலித்தார்கள் என்றே சொல்லலாம்.
அதனை அடுத்து எதிர்பாராதவிதமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டார்கள். அதற்குப் பின் ஆல்யா விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்தார். இவர்கள் இருவருமே சீரியல் முடிவதற்கு முன்பே தங்களின் காதலை எல்லோருக்குமே தெரிவித்தார்கள். பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி ஆலியா-சஞ்சீவ் இருவரும் அவரச அவசரமாக திருமணம் செய்து கொணட்டார்கள். ஆரம்பத்தில் இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தாலும் பிறகு சஞ்சீவ் அம்மா இருவரையுமே ஏற்றுக் கொண்டார்.
ஆலியா குறித்த தகவல்:
அதற்கு பின்பு இவர்களுடைய ரிசப்ஷன் பிரபலமாக நடந்தது. திருமணத்திற்குப் பின்பும் ஆல்யா தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். ஆல்யா மானசா சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதே போல் சஞ்சீவ், கயல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தான் இவர்கள் இருவரும் தங்களுடைய கனவு வில்லா ஒன்றை கட்டி முடித்து கிரகப்பிரவேசம் எல்லாம் செய்திருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஆலியா மானசாவின் முன்னாள் காதலனின் மனைவிக்கு மீண்டும் திருமணம் நடைபெற்றிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுபிக்ஷா குறித்த தகவல்:
ஆலியாவை பிரிந்தவுடன் மானஸ், சீரியல் நடிகையும் டான்சருமான சுபிக்ஷா என்பவரை காதலித்து வந்தார். சுபிக்ஷா முதன் முதலாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இருந்த ‘நீதானே என் பொன்வசந்தம்’ என்ற சீரியலில் ஹீரோவின் அண்ணியாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்த சீரியலை தொடர்ந்து இவர் ‘ரஜினி’ என்ற சீரியலில் நடித்திருந்தார். பெரும்பாலும் இவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். தற்போது இவர் ‘வீரா’ என்ற சீரியலில் கண்மணி ஆக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சுபிக்ஷா முதல் திருமணம்:
இவர் மானஸை கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கலா மாஸ்டர் மற்றும் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடந்திருந்தது. மானஸ், நீயா 2 என்ற படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இவரும் சில சீரியல்களில் நடித்திருந்தார். தற்போது இவர் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் திருமணம் ஆன இரண்டு வருடத்திலேயே இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.
சுபிக்ஷா இரண்டாவது திருமணம்:
அதுமட்டுமில்லாமல் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் மானஸ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாம் சுபிக்ஷா நீக்கி இருந்தார். இந்த நிலையில் தற்போது சுபிக்ஷா அவர்கள் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் அவினாஷ் வாசுதேவன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ப்தியாக இருந்தாலும் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.