சீரியல்ல இருந்து சினிமாவுக்கு போன இதான் நடக்கும் ஆனா – மனம் திறந்த நடிகை சுபிக்‌ஷா

0
64
- Advertisement -

கதாநாயகியாக சீரியல் நடிகை சுபிக்ஷா நடித்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் சுபிக்ஷா. இவர் சீரியல் நடிகை மட்டும் இல்லாமல் டான்சரும் ஆவார். சுபிக்ஷா முதன் முதலாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இருந்த ‘நீ தான் என் பொன்வசந்தம்’ என்ற சீரியலில் ஹீரோவின் அண்ணியாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

-விளம்பரம்-

இந்த சீரியலை தொடர்ந்து இவர் ‘ரஜினி’ என்ற சீரியலில் நடித்திருந்தார். பெரும்பாலும் இவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். இந்த சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதற்கிடையில் இவர் மானஸை கடந்த 2020-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து இருந்தார். இவர்களுடைய திருமணம் கலா மாஸ்டர் மற்றும் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்திருந்தது.

- Advertisement -

சுபிக்ஷா குறித்த தகவல்:

இதை அடுத்து திருமணம் ஆன இரண்டு வருடத்திலேயே இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். அதன் பின் சமீபத்தில் தான் சுபிக்ஷா அவர்கள் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் அவினாஷ் வாசுதேவன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. மேலும், தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘வீரா’ என்ற சீரியலில் வில்லி ரோலில் மிரட்டிக்கொண்டு வருகிறார்.

சுபிக்ஷா பேட்டி:

அது மட்டுமில்லாமல் தற்போது வெளியாகி வெளியாகி இருக்கும் ஃபேமிலி படத்தில் கதாநாயகியாக சுபிக்‌ஷா நடித்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சுபிக்‌ஷா, ரியாலிட்டி ஷோ, சீரியல் என்று என்னுடைய கேரியர் தொடங்கியது. சீரியல் ஆர்ட்டிஸ்ட் என்ற அடையாளம் வந்தாலே சினிமா வாய்ப்பு வருவது குதிரை கொம்பு தான். அதிலும் சீரியலில் ரொம்பவே பிரபலமான ஆர்டிஸ்ட் ஆக இருந்தால் கூட சினிமா பக்கம் போற வாய்ப்பில்லை என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

சீரியல் அனுபவம்:

விதிவிலக்காக விரல் விட்டு எண்ணக்கூடிய ஒன்னு ரெண்டு பேர்தான் சினிமாவிற்கு போகிறார்கள். சீரியல் ஆர்ட்டிஸ்ட் எல்லோருக்குமே சினிமா கனவு என்பது நிச்சயமாக இருக்கும். ஆனால், பெரும்பாலும் வாய்ப்பு கிடைக்காது. ஒருவேளை அப்படியே வந்தாலும் அது லக்கில் தான் நடக்கிறது. டிவியில் பிரபலமான எத்தனையோ பேர் சினிமா வாய்ப்பினால் போய் ஏமாந்து வந்த கதை எல்லாம் நிறைய இருக்கிறது. சின்ன சின்ன வாய்ப்பு கிடைத்து நடிக்க போனவர்களுக்கெல்லாம் சூட்டிங் ஸ்பாட்டில் பெரிய அளவு மரியாதையும் கொடுப்பதில்லை என்றாலும் சொல்லியிருக்கிறார்கள்.

சினிமா வாய்ப்பு:

இப்படியான சூழ்நிலையில் எனக்கு ஒரு படத்தில் ஹீரோயினி வாய்ப்பு அமைந்தது. அதை பிரபல தனியார் பத்திரிகையிலும் நாலு வார்த்தை நல்ல விதமாக எழுதி இருப்பதால் நிஜமாகவே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அடுத்து யோகி பாபுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். இந்த படமும் சில மாதங்களில் ரிலீஸ் ஆகிறது. சீரியல், சினிமா என்பது இரண்டுமே நடிப்பு தான். கால்ஷீட் சொதப்பாமல் நம்மால் முடிந்த உழைப்பை தரும் போது நிச்சயம் அதுக்கான பலன் நம்மை வந்து சேரும். அதனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement