அஜித் சாரிடம் இந்த விஷயத்தை கத்துக்கிட்டேன் ! சந்திரலேகா சீரியல் ஸ்வேதா ஓப்பன் டாக்

0
923
Ajith

ஆழ்வார்’ படத்தில் அறிமுகமாகி பல்வேறு படங்களில் ஹீரோயினாக வலம் வந்தவர் ஸ்வேதா. ஸ்வேதா என்ற பெயர் நமக்கு புதியதுதான்.. ஏனெனில் அவர் சந்திராவாகத்தான் நமக்கு பரீட்சயமாகியிருக்கிறார். பத்துக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கும் ஸ்வேதா, சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘சந்திரலேகா’ மூலம் நம் இல்லங்களுக்கு திரைவழியாக விசிட் அடிப்பவரை போனில் பிடித்தேன்.

Chandiralekha

என்னுடைய சொந்த ஊர் புனே. ஆனா, பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையிலதான். நானும், என் தம்பியும் சேர்ந்து ஏதாச்சும் சேட்டை செஞ்சு அம்மா, அப்பாகிட்ட திட்டு வாங்கிட்டு இருப்போம். என் பலமும் பலவீனமும் என் ஃபேமிலிதான்.

ஹீரோயின் வாய்ப்பு எப்படி கிடைச்சது..?

எனக்குச் சின்ன வயசுலருந்தே மாடலிங் துறைல ஆர்வம் அதிகமாயிருந்துச்சு. அதுனாலதான் படிச்சிட்டு இருக்கும்போதே அந்த துறையைத் தேர்வு செஞ்சேன். கொஞ்ச நாள் மாடலிங் பண்ணிட்டு இருந்தேன். மாடலிங் மூலமாதான் எனக்கு சினிமா வாய்ப்பு கிடைச்சது. வீட்டுல என்னுடைய விருப்பத்துக்கு கிரீன் சிக்னல் கொடுத்தாங்க.

shwetha actor

அப்படித்தான் ‘ஆழ்வார்’ படத்துல அஜித் சாருக்கு தங்கச்சி கேரக்டர்ல நடிச்சேன். அதுக்கப்புறம் நான் நடிச்ச எல்லா படத்துலயும் நான்தான் ஹீரோயின். முதல் படத்துல மட்டும் தான் கேரக்டர் ரோல் பண்ணேன்.

ஆழ்வார் பட அனுபவம் பற்றி..?

ஆழ்வார் படத்துல நடிக்கும்போது ‘தல’ அஜித் கூட நடிக்கப் போறோம்னு ரொம்பவே ஹாப்பியா இருந்துச்சு. தல ரொம்பவே அமைதியான ஃபர்சன்.

swetha

அவர் செட்டுக்குள்ள வந்த உடனேயே எல்லோருக்கும் வணக்கம் சொல்லுவார். சின்னவங்க, பெரியவங்கணுலாம் கிடையாது. எல்லோருக்கும் மரியாதை கொடுப்பார். எல்லோரையும் மதிக்குற குணத்தை நான் அவரிடமிருந்துதான் கத்துகிட்டேன்.