பட வாய்ப்பிற்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொல்றாங்க – சீரியலுக்கு வந்த சசிகுமார் பட நடிகையின் வேதனை பேட்டி. 

0
891
janaki
- Advertisement -

பட வாய்ப்பிற்காக அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொல்லியிருக்காங்க என்று சசிகுமார் படம் நடிகை அளித்துள்ள பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு பல நடிகைகள் சென்றிருக்கிறார்கள். தேவையானி, ராதிகா, ரம்யா கிருஷ்ணன் என தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த பல நடிகைகள் படவாய்ப்பு குறையத் தொடங்கிய உடன் சின்னத்திரை பக்கம் சென்று இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் ஜானகி தேவி. இவர் காவலன், ரம்மி, சுந்தர பாண்டியன் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் பெரும்பாலும் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் தான் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதிலும் சசிகுமார் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் ஜானகி மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்த படத்திற்கு பிறகு இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். பிறகு சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கியவுடன் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். தற்போது ஜானகி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் திருமகள் மற்றும் கயல் தொடர்களில் நடித்து வருகிறார். இந்த தொடர்களின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மீண்டும் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்.

- Advertisement -

ஜானகிதேவி அளித்த பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் இவரிடம் பிரபல ஊடகம் ஒன்று பேட்டி எடுத்தது. அதில் ஜானகிதேவி தன்னுடைய திரைப்பயணத்தை பற்றியும், திரைப்பயணத்தின் போது அனுபவித்த பல விஷயங்களையும் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் மீடியாவுக்குள் செல்கிறேன் என்று சொன்னவுடன் ஆரம்பத்தில் யாரும் ஒத்துக்கொள்ள இல்லை. அப்பா, அம்மா தரப்பு உறவினர்கள் கூட ஒத்துக் கொள்ளவில்லை. பல போராட்டங்களுக்கு பிறகு தான் மீடியாவுக்குள் நுழைந்தேன். அப்போது என் குடும்ப சூழ்நிலை ரொம்ப கஷ்டமாக இருந்தது. இருவரில் ஒருவர்தான் படிக்கவேண்டிய கட்டாயம்.

சினிமாவில் நுழைந்த அனுபவம்:

அதனால் என் தம்பியை படிக்க சொல்லி என்னுடைய படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சினிமாவுக்குள் நுழைந்தேன். ஆரம்பத்தில் எனக்கு சின்ன சின்ன ரோல் தான் கிடைத்தது. அதன் மூலமாகத்தான் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் பரிச்சயமானேன். அதிகம் நான் வில்லி கதாபாத்திரங்களில் தான் நடித்திருந்தேன். இதனால் பல பேர் என்னை திட்டுவார்கள். என்னுடைய மாமியார் கூட, நான் ரொம்ப வில்லியாக இருக்கிறேன் , குடும்பத்திற்கு ஏற்றவளா? என்று எல்லாம் விசாரித்த பிறகுதான் திருமணத்திற்கு ஒத்து கொண்டார். இதனால் மீடியாவிற்கு இருக்கும் போது பல பிரச்சனைகளை சந்தித்து தான் ஆக வேண்டும். சினிமாவைப் பொருத்தவரை டிமாண்ட் என்பது கிடையாது.

-விளம்பரம்-

சினிமாவிற்காக நடக்கும் பிரச்சனைகள்:

எங்கு சென்றாலும் எல்லா தொழில்களிலும் அட்ஜஸ்ட்மெண்ட் என்ற விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் நம்முடன் பழகும் விதம் தெரியும். நமக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த இடத்திலிருந்து நகர்ந்து விட வேண்டும். ஒரு ஆண் ஒரு பெண்ணை தொடும் போதும், பேசும் போதும் அவர் எந்த நோக்கில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளும் திறமை எல்லா பெண்களுக்கும் உண்டு. சினிமாவில் மட்டும் இல்லாமல் எல்லா இடங்களிலும் சிலர் வக்கிரமான புத்தி உடையவர்கள் உண்டு. அப்படி தான் எனக்கு தெரிந்த ஒரு பெண் இன்ஸ்டாகிராம் ரிலீஸ் மூலம் மிகப் பிரபலமானவர். அவரை இன்ஸ்டாகிராமில் பல பேர் ஃபாலோ செய்கிறார்கள். அந்த பெண் சினிமா வாய்ப்புக்காக தேடி கொண்டு இருக்கிறார்.

சினிமா வாய்ப்புக்காக பெண்களை நடத்தும் விதம்:

இதை தெரிந்த நபர் ஒருவர் அந்தப் பெண்ணிற்கு மிக மோசமாக மெசேஜ்களை போட்டிருக்கிறார். சினிமா வாய்ப்பு வேண்டுமென்றால் வந்து மீட் பண்ண வேண்டும் என்றெல்லாம் வாயில் சொல்ல முடியாத அளவிற்கு அவ்வளவு கேவலமாக சொல்லி இருக்கிறார். பொதுவாகவே எந்த ஒரு நல்ல மீடியாவும் இப்படி அணுகுவது கிடையாது. சினிமா வாய்ப்புக்காக ஏங்கும் நடிகைகளிடம் இதுபோன்ற அணுகுமுறையை நிறைய பேர் செய்கிறார்கள். இவர்கள் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இல்லாமல் வேறு ஒரு நோக்கில் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அது போன்ற இடங்களில் இருந்து நாம் வெளியேறுவது தான் நல்லது என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement