இறந்த மகனை நினைத்து நடிகரும் டாக்டருமான சேதுராமின் தந்தை அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகரும் மருத்துவருமான சேது ராமன். சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் சந்தானத்தின் மூலம் தான் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பின்னர் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார் சேது ராமன். மேலும், டாக்டர் சேதுராமன் அண்ணா பல்கலைக்கழகத்தில் சரும நிபுணர் எனப்படும் dermatology என்ற துறையில் மருத்துவ படிப்பை முடித்து இருந்தார். பின் கடந்த 2016 ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு தோல் நோய் மருத்துவமனை ஒன்றை திறந்தார்.

Advertisement

சேதுராமன் குறித்த தகவல்:

இதில் சந்தானம், பாபிசிம்ஹா, நிதின் சத்யா, வெங்கட்பிரபு என்று பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இதனைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் கடந்த 15 ஆம் தேதி அண்ணா நகரில் தனது இரண்டாவது மருத்துவமனையையும் திறந்தார் சேதுராமன். மருத்துவர் மற்றும் நடிகர் என்று இரண்டு துறையில் இருந்து வந்த டாக்டர் சேதுராமன் கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி உமாவை திருமணம் செய்து கொண்டார்.

மாரடைப்பால் மறைந்த சேதுராமன் :

சேதுராமன் வாழ்கை நன்றாக சென்று கொண்டு இருந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே போல டாக்டர் சேதுராமன் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்து விட்டார் என்ற ஒரு வதந்தியும் பரவியது. ஆனால், அவர் மாரடைப்பால் தான் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்து இருந்தனர். சேதுராமன் இறந்த போது அவரது மனைவி உமா கர்ப்பமாக இருந்தார்.

Advertisement

சேதுராமனின் தந்தை அளித்த பேட்டி:

சமீபத்தில் தான் சேது ராமனின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் உமா உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருந்தார். இந்த நிலையில் மறைந்த நடிகர் சேதுராமனின் தந்தை டாக்டர் விசுவநாதன் பேட்டியில் கூறியிருப்பது, இறப்பதற்கு முன்பு என்னுடைய மகன் நன்றாக தான் இருந்தான். வாக்கிங் எல்லாம் செய்து இருந்தான். என் மகன் நிறைய ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். அப்போது கொரோனா காலம் தொடங்கி இருந்தது. யூடியூபில் தந்தை மகனுக்கு சொல்ல வேண்டிய ஐந்து விஷயங்களை பற்றி காணொளியாக சொல்லியிருந்தார்.

Advertisement

சேதுராமன் குறித்து சொன்னது:

அவர் இறந்த பிறகு பலரும் எனக்கு போன் செய்து ஆறுதலாக பேசியிருந்தார்கள். ஆவிகளிடம் பேசும் நபர் கூட என்னிடம் பேசினார். அதில், அப்பாவை கவலைப்பட வேண்டாம், என்னை மிஸ் செய்வதாக சேது சொன்னதாகவே சொன்னார்கள். என்னதான் ஆறுதல் சொன்னாலும் என்னுடைய மகன் இல்லையே என்ற வேதனை என்னை ரொம்பவே கொள்கிறது. அவனை நினைத்து அழாத நாளே இல்லை. ஆன்மீகத்தில் நம்மை விட்டு விட்டுப் போனவர் திரும்ப கிடைப்பார் என தெரிவிக்கின்றனர். அந்த நம்பிக்கையில் தான் இருக்கிறேன் என்று கண்ணீருடன் கூறியிருந்தார்.

Advertisement