ஷாருக்கானின் சிக்ஸ் பேக் ரகசியம் தெரியுமா? உங்களால் இத பண்ண முடியுமா!

0
1232

சினிமா பின்னனி இல்லாமல் வந்து உலகத்தின் பெரிய நடிகர் ஆனவர்களில் ஷாருக் கானும் ஒருவர். படிப்படியாக தனது திறமைகளை வளர்த்து தற்போது உலக அரங்கில் போற்றப்படும் நடிகராக இருக்கிறார்.
Shah Rukh Khan
1992ல் முதல் முதலாக ‘டர்’ என்ற பாலிவுட் படத்தில் நடித்தார். அன்றிலிருந்து அவருடைய உழைப்பும் தன்னம்பிக்கையும் அவரை தற்போது இந்த உயரத்தில் கொண்டு வந்து வைத்துள்ளது. சமீபத்தில் தான் தனது 52ஆவது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினார் ஷாருக் கான்.

தற்போது கோடிக்கனக்கில் ரசிகர்களுடன் இருக்கும் இந்த சூப்பர் ஸ்டாரின் உடல் கட்டமைப்பு ரகசியம் தெரியுமா?

- Advertisement -

நம் உணவில் எப்போதும் அதிகப்படியான ப்ரோட்டீன்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு குறைவான சிக்கன், பால் மற்றும் முட்டையின் வெள்ளைப் பகுதியயை மட்டும் சாப்பிட வேண்டும்.
Shah Rukh Khan
எண்ணெயில் பொரித்த உணவுகளை அறவே ஒதுக்கிவிடுகிறார் ஷாருக். அதற்கு பதிலாக க்ரில் செய்யப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்கிறார் ஷாருக் கான். மேலும், வெண்ணை, சீஸ் போன்றவற்றையும் ஒதுக்கிவிடுகிறார். அதனோடு சேர்த்து வெள்ளைச் சர்க்கரையையும் எடுத்துக்கொள்வதில்லை. இனிப்பிற்க்காக பழங்களை சேர்த்துக்கொள்கிறார்.

தினமும் காலை வொர்க் அவுட் செய்த பிறகு, புரோட்டீன் ட்ரின்க் எடுத்துக்கொள்கிறார் ஷாருக் கான். பெரும்பாலும் வெஜிடேரியன் மட்டுமே எடுத்துக்கொள்கிறார். மேலும், கார்போஹைட்ரேட் குறைந்த உணவு தான் அதிலும் பெஸ்ட்.
Shah Rukh Khan
ஒரு நாளைக்கு தண்ணீர் மட்டுமே 3 லிட்டர் குடிக்கிறார். சாப்பிடும் காய்கறிகளில் சாலட் போல் அனைத்து வகையான கலரில் உள்ள காய்கறி பழங்களை சேர்த்துக்கொள்கிறார்.அதிகப்படியான் நார்ச்சத்து உள்ள பழங்களும் தேவையான அளவு மினரல்களும் எடுத்துக்கொள்கிறார்.

-விளம்பரம்-

இவைதான் 52 வயதிலும் ஷாருக் கான் சிக்ஸ் பேக் வைத்துள்ளதற்கான ரகசியமாகும்.

Advertisement