பீஸ்ட் படத்தின் போஸ்டரை போட்டு விஜய் குறித்து கேட்ட ரசிகர் – ஒரே வார்த்தையில் பதில் அளித்த ஷாருக் கான்.

0
1983
vijay

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்தியில் ஒரு சில நடிகர் நடிகைகளை நன்கு தெரிந்திருக்கும். அந்த வகையில் ஷாருக்கானும் பிற மொழி சினிமா ரசிகர்களால் அறியப்பட்டுள்ள ஒரு மாபெரும் நடிகர். இந்தியில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் ஷாருகான் உலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் ஷாருக்கான் இந்தியில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதே போல இவரது படங்கள் தமிழிலும் டப் செய்து வெளியாகியிருக்கிறது அந்த வகையில் இவர் நடித்த பல்வேறு படங்கள் தமிழிலும் சூப்பர் ஹிட் அடைந்துள்ளது.

இத்தனை ஆண்டுகள் ஆனாலும், இந்தி சினிமாவில் இன்னமும் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் ஷாரூக்கான். மேலும் அவருக்கும் தமிழ் சினிமாவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர்கள் ஷாருக்கான் நெருங்கிய நண்பர்கள் அவர்கள். அந்த வகையில் நடிகர் விஜய் மிகவும் நெருக்கம் தான்.

இதையும் பாருங்க : கிரிக்கெட் வீரருடன் சங்கர் மகளுக்கு திருமணம் – வெளியான மாப்பிள்ளையின் புகைப்படம்.

- Advertisement -

பல ஆண்டுகளுக்கு விருது விழா ஒன்றில் விஜய் மற்றும் ஷாருக் கான் ஒன்றாக நடனமாடி இருந்தனர். எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷாருக்கானை கோடிக்கணக்கான ரசிகர்கள் இவரை சமூக வலைதளத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர் மேலும் ஷாருக்கானும் அடிக்கடி சமூகவலைதளத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம். அதே போல ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மிகவும் ஒளிவு மறைவு இல்லாமல் பதில் கூறும் நபர் தான் ஷாருக்கான்.

இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் , விஜய்யின் பீஸ்ட் படத்தின் இரண்டாம் போஸ்டர் புகைப்படத்தை போட்டு விஜய் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்கள் என்று கேட்டதர்க்கு, very cool என்று பதில் அளித்துள்ளார் ஷாருக்கான். ஷாருக்கான் விஜய் பற்றி இப்படி சொல்வது முதல் முறை அல்ல, கடந்த 2019 ஆம் ஆண்டு இதே போல விஜய் குறித்து கேட்டதற்கு ‘Awesome’ என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement