என் மகன் ஜெயில்ல இருந்து வர வரைக்கும் – வீட்டு வேலையாட்களுக்கு ஷாருக்கான் மனைவி போட்ட உத்தரவு.

0
56725
shah
- Advertisement -

தன் மகன் சிறையிலிருந்து வரும் வரை வீட்டில் எதுவும் செய்யா கூடாது என்று வீட்டு வேலை ஆட்களுக்கு கௌரி கான் உத்தரவு போட்டு உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகரான ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதற்காக கடந்த 3ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்யப்பட்ட சம்பவம் அனைவருக்கும் தெரிந்ததே. இதுகுறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்தது. மேலும், ஷாருக்கான் தன் மகன் ஜாமீனுக்காக போராடி வருகிறார். ஆனால், ஆர்யான் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்து இருக்கிறது.

-விளம்பரம்-
ஆர்யன் கான்... பெற்றோருடன்

இவருடைய ஜாமீன் மனு தீர்ப்பு 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஆர்யான் கானின் ஒட்டுமொத்த குடும்பமே சோகத்தில் உள்ளது. நடிகர் ஷாருக்கான் அவர்கள் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். அது மட்டுமில்லாமல் படப்பிடிப்புகளையும் அவர் ஒத்தி வைத்து இருக்கிறார். கண்டிப்பாக ஆர்யான் கான் தீபாவளிக்குள் ஜாமினில் விடுதலையாகி விடுவார் என்று ஷாருக்கான் குடும்பமே நம்பி இருக்கிறது. பொதுவாகவே பக்ரீத் மற்றும் தீபாவளிக்காக ஷாருக்கான் வீடு முழுக்க அழகான மின்சார விளக்கால் பொருத்தப்பட்டு இருக்கும்.

- Advertisement -

ஆனால், இந்த முறை எந்த மின் விளக்கை ஆன் பண்ணவில்லை. கௌரி கான் தன் மகன் வெளியில் வர வேண்டும் என்பதற்காக நவராத்திரியின்போது நோன்பிருந்து பூஜை செய்து இருக்கிறார். அப்போது சமையல்காரர்கள் இனிப்பு செய்ததற்கு தன் மகன் வெளியே வரும் வரை வீட்டில் எந்த வகையான இனிப்பையும் செய்யக் கூடாது என்று உத்தரவு போட்டுள்ளார். மேலும், தனது மகனின் நண்பர்களுக்கு போன் செய்து என் மகள் வெளியில் வர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் என்று புலம்பி அழுகிறார்.

அதோடு ஆர்யான் கான் கைது நினைத்து கௌரி மிகவும் உடைந்து போய் இருப்பதாக அவருடைய தோழிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல் ஷாருக்கான் தன்னுடைய பாலிவுட் நண்பர்களிடம் வீட்டுக்கு வரவேண்டாம் என்றும் அனைவரிடமும் போன் காலில் தொடர்பில் இருப்பதாகவும் அவருடைய நண்பர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆர்யான் கானின் விவகாரத்தில் விசாரணை ஏஜென்சிக்கு சாருக்கான் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. பிரபல பாலிவுட் நடிகர் தன் மகனை வெளியே எடுக்க முடியாமல் திண்டாடி வரும் தகவல் சோஷியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement