தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத அளவிற்கு வசூலிலும், புகழின் உச்சத்திலும் இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களின் மத்தியில் பேராதரவும், கோடிக்கணக்கில் வசூல் சாதனையும் படைத்து இருகின்றது. ஆனால், சினிமாவின் ஆரம்ப காலத்தில் மற்ற நடிகர்களை போல ஒரு சில வெற்றிப் படங்களை மட்டும் தான் நடிகர் விஜய் கொடுத்து இருந்தார். அதில் பூவே உனக்காக என்ற படம் தான் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது. அதன்பிறகு ஒரு சில படங்கள் விஜய் நடிப்பில் வெளியாகி காலம் கடந்து தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அப்படிப்பட்ட திரைப்படத்தில் ஒன்று தான் ஷாஜகான். இப்படம் வெளிவந்த காலத்தில் அனைத்து காதலர்களும் தூக்கிவைத்துக் கொண்டாடி இருந்தார்கள். அதற்கு காரணம் கதையம்சம். படத்தில் விஜய் தான் விரும்பும் காதலி மற்றொரு நண்பரை விரும்புவதை பார்த்து அவர்களை சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். விஜய்யின் நண்பர் கதாபாத்திரத்தில் திவாகரன் கிருஷ்ணா நடித்திருப்பார். இறுதியில் கதாநாயகி ரிச்சா பலோட்டை திவாகரன் கிருஷ்ணாவுடன் விஜய் சேர்த்து வைத்துவிடுவார். இதுதான் படத்தின் முழு கதை.
திவாகரன் கிருஷ்ணா திரைப்பயணம்:
மேலும், இப்படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்த திவாகரன் கிருஷ்ணா பிரியா வரம் வேண்டும், புன்னகை தேசம் போன்ற ஒரு சில படங்களில் மட்டும் நடித்து இருக்கிறார். ஆனால், இவர் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார். இவர் சிறுவயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார். தற்போது கிருஷ்ணா மலையாளத்தில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் விஜய் குறித்து கூறியிருப்பது, எங்களுடைய குடும்பமே கலைக் குடும்பம். நான் ஷாஜகன் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்து இருந்தேன்.
திவாகரன் கிருஷ்ணா அளித்த பேட்டி:
அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால், ஷாஜகன் படத்துக்கு கிடைத்த வரவேற்பை நான் சரியாக பயன்படுத்தவில்லை. அந்த நேரத்தில் நான் படிப்பில் கவனம் செலுத்தி இருந்தேன். கைத்தொழில் இருக்க வேண்டும் என்பதற்காக நான் சினிமாவை விட படிப்பில் கவனம் செலுத்தி இருந்தேன். 3 வருடங்கள் சினிமாவில் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தேன். அதோடு அந்த டைமில் எனக்கு நிறைய படங்கள் மிஸ் ஆகிவிட்டது. அப்படியே தமிழ் ரசிகர்கள் என்னை மறந்து விட்டார்கள். அதற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து மலையாளத்தில் படங்கள் பண்ண ஆரம்பித்தேன். மலையாளத்தில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
விஜய் குறித்து திவாகரன் சொன்னது:
ஆனால், தமிழில் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. விஜய் சாருடன் நடிக்கும் போகுது ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். அது எனக்கு பிரசாந்த் உடன் கிடைக்க வில்லை. விஜய் சார் ரொம்ப எளிமையானவர். அவர் வந்து போவது கூட தெரியாது. ஷாஜகான் படம் தான் சாருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இப்ப விஜய் சார் வேற வேற மாதிரி. நான் அவரை தொடர்பு கொள்ள பல முறை முயற்சி செய்தேன். அப்போது ஒரு முறை அவருடைய செக்யூரிட்டியிடம் பேசினேன். அதில், நான் விஜய் சாரோட பேசணும். நான் சாஜகான் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்திருக்கிறேன் என்று சொன்னேன்.
தமிழ் படம் குறித்து திவாகரன் கூறியது:
அதற்கு அவர், இப்ப ஷாஜகான் விஜய் சார் கிடையாது பீஸ்ட் விஜய் சார் என்று சொன்னார். அப்படினா அவருடன் பேசுவதற்கும், உட்காருவதற்கும் ஆன டைம் முடிந்துவிட்டது. எப்படியாவது அவரை பார்ப்பதற்கு கடவுள் வாய்ப்பு தருவார். நான் தமிழில் மீண்டும் நடிப்பதற்கு முயற்சி செய்கிறேன். ஆனால், வாய்ப்புகள் அமையவில்லை. எதிர்காலம் இருக்கிறது கண்டிப்பாக தமிழில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த வருடம் இல்லை என்றால் அடுத்த வருடமாவது விஜய் சாரை நேரில் சந்தித்து வாய்ப்பு கேட்பேன். எனக்கு அந்த பாசம் இருக்கிறது. அவருக்கு இருக்கா என்று தெரியவில்லை? ஆனால், வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.