அன்னையர் தினத்தில் மறைந்த தனது அம்மாவுடன் இளம் வயதில் எடுத்த அறிய புகைப்படத்தை வெளியிட்ட கமல்.

0
595
kamal

சினிமா உலகில் தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் உலக நாயகன் கமலஹாசன். நடிகர் கமலஹாசன் அவர்கள் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக அவதாரம் எடுத்து உள்ளார். கமலஹாசன் அவர்கள் இந்தியத் திரைப்பட நடிகர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பின்னனிப் பாடகர், நடன அமைப்பாளர் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர். இவர் சினிமா திரை உலகில் தன்னுடைய கடுமையான உழைப்பாலும், முயற்சியாலும் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறார்.

இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகளவில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதனால் தான் இவரை உலகநாயகன் என்று அழைக்கிறார்கள். இது அனைவருக்கும் தெரிந்தது. நடிகராக இருந்த கமல் தற்போது தீவிர அரசியல் தலைவராகவும் உருவெடுத்து உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மைய்யமும் போட்டியிட்டது. இதில் கமல் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.

இதையும் பாருங்க : மீசையே முலைக்கல லவ்வு ஒரு கேடா – மருமகேளே வீடியோவை கிழித்து தொங்கவிட்ட ஜிபி முத்து.

- Advertisement -

இதில் பா ஜ க வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனிடன் வெறும் 1500 வாக்கு வித்தியாசத்தில் தோற்றார் கமல். கமலின் மக்கள் நீதி மைய்யம் போட்டியிட்ட எந்த தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. இப்படி ஒரு நிலையில் கமலின் கட்சியில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகினர். இருப்பினும் தனது கட்டுப்பாட்டில் தொடர்ந்து கட்சி நடைபெறும் என்று கூறியுள்ளார் கமல். கமல், ஸ்ரீநிவாசன், ராஜலட்சுமி தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.

இவரது தந்தை ஒரு வழக்கறிஞ்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் அம்மா அப்பா இருவருமே இல்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி தனது அம்மாவின் இறப்பு குறித்து பேசிய போது, தனது அம்மா பற்றி பேசிய கமல், ஆடு புலி ஆட்டம்ன்னு ஒரு படம் நடிச்சிட்டு இருக்கும் போது, எங்கம்மாக்கு ஹார்ட் அட்டாக்குன்னு சொன்னாங்க. அவங்களுக்கு நிறைய தடவை இப்படி ஹார்ட் அட்டாக் வரும், அதெல்லாம் ஒண்ணுமில்ல என ஷூட்டிங்கில் நடித்து விட்டு, காரில் ஏறும் போது தான் அம்மா இறந்துட்டாங்கன்னே சொன்னாங்க என கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு இளம் வயதில் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் கமல்.

-விளம்பரம்-
Advertisement