ஐ படத்துல அவங்கள திருநங்கையா காண்பிச்சதே தப்பு – ஷகீலாவின் மகள் சொன்ன ஷாக்கிங் உண்மை.

0
74332
mila
- Advertisement -

சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை. இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். கவுண்டமணியுடன் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து இருந்தார். இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

-விளம்பரம்-
Ojas Rajani - Make-up Artist, Hair and Fashion Stylist.

இவர் முதலில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தது மலையாள மொழி படங்களில் தான். அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சி விருந்து படைத்தவர். இளமை போன பின்னரும் இவர் ஷகீலாவாக பல படங்களில் நடித்து இருந்தார். கவர்ச்சி நடிகையாக இருந்த இவரை தற்போது அம்மா என்று சொல்லும் அளவிற்கு மாற்றியது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிதான்.

இதையும் பாருங்க : குளியல் தொட்டியில் பிகில் பட தென்றல் (அம்ரிதா) – ஒரு வேல வேம்பு(இந்துஜா) ஐடியாவா இருக்குமோ.

- Advertisement -

அதே போல இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும் இவர் மிளா என்ற திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும், இவர் ஒரு ஆடை வடிவமைப்பாளராக வேலை செய்து வருகிறார். அதே போல இவர் சில சீரியல்களில் கூட நடித்து இருக்கிறாராம். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தியாகம், மருதாணி சீரியலில் நடித்துள்ளாராம்.இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர் தன்னை பற்றி பல விஷயங்களை கூறி உள்ளார்.

வீடியோவில் 17 : 55 நிமிடத்தில் பார்க்கவும்

அதிலும் குறிப்பாக சினிமாவில் திருநங்கைகளை பற்றி காண்பிக்கப்படுவது குறித்து பேசிய மிளா, ஐ படத்தில் ஹீரோ, ஹீரோயின் காதலை பெரிதாக காண்பித்து இருப்பார்கள். ஆனால், ஓஜாஸ் ரஜானி வரும் போது அருவருப்பாக இருப்பது போல காண்பிப்பார்கள். உண்மையில் ஓஜாஸ் ரஜானி திருநங்கை கிடையாது. அவர் ஒரு ஓரின சேர்க்கையாளர். அவரை திருநங்கையாக காண்பித்ததே தவறு தான். இப்படி திருநங்கைகளை தப்பாக காண்பிக்கக் கூடாது என்று தனது ஆதங்கத்தை பேசியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement