‘நரம்பு தளர்ச்சியா, கை ஏன் ஆடுது’ – போலி சாமியார் அன்னபூரணியை வெளுத்து வாங்கிய ஷகீலா. வீடியோ இதோ.

0
955
shakeela
- Advertisement -

கடந்த சில தினங்களாக சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பேசப்பட்டு வரும் போலி சாமியார் அன்னபூரணியை பலரும் வச்சி செய்து வரும் நிலையில் தற்போது தன் பங்கிற்கு வச்சி செய்து இருகிறார் ஷகீலா. சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. தமிழ் ரசிகர்கள் மலையாள படங்களை பார்க்க மிக முக்கியமான காரணங்களில் ஒருவராக இருந்தவர் ஷகீலா என்று சொன்னால் மிகையாகாது. மலையாளதில் பல ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர்.

-விளம்பரம்-

மலையாள நடிகை ஷகீலா :

இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். கவுண்டமணியுடன் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து இருந்தார். இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் முதலில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தது மலையாள மொழி படங்களில் தான்.

- Advertisement -

பார்வையை மாற்றிய CWC :

மலையாளத்தில் மட்டும் அல்லாமல் தென்னிந்திய ரசிகர்கள் முழுதும் பிரபலமானவர். கவர்ச்சி நடிகையாக பார்க்கப்பட்ட இவர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் பலரின் அம்மாவாக பார்க்கப்பட்டு வருகிறார். சமீப காலமாகவே சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷகீலா அடிக்கடி பல்வேறு சமூக பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார். அதே போக இவர் சொந்தமாக யூடுயூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

‘இது எல்லாம் ஏமாத்து வேல தான்’

இதில் அடிக்கடி எதாவது சர்ச்சையை ஏற்படுத்திய விஷயங்கள் குறித்து பேசி வருகிறார். சமீபத்தில் கூட ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ஐட்டம் பாடல் சர்ச்சை குறித்து பேசி இருந்தார். மேலும், இவர் எல்லா விஷயத்திலும் மிகவும் ஞாயமாகவே பேசுவார் அந்த வகையில் தற்போது திடீர் சாமியார் அன்னபூரணி பற்றி பேசி இருக்கிறார். அதில் பேசியுள்ள ஷகீலா ‘இது எல்லாம் ஏமாத்து வேல தான்’

-விளம்பரம்-

பூவ சாமிக்கு போடு இல்ல சாவுக்கு போடு :

மக்களுக்கு எங்க போச்சி புத்தி . சித்தர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்று நானும் நம்பரவ தான். ஆனால், இந்த அம்மா பியூட்டி பார்லர் போய்ட்டு, மேக்கப்போட்டுக்கிட்டு, லிப் ஸ்டிக் போட்டுட்டு இருக்கு. அவங்க வர பாதைல பூ போடறாங்க. ஒன்னு பூவ சாமிக்கு போடு இல்ல சாவுக்கு போடு, இல்ல நல்ல காரியத்துக்கு போடு.

அந்த அம்மாவுக்கு என்ன நரம்பு தளர்ச்சியா :

நாம தான் இந்த மாதிரி ஆள வளத்து விடுறது. அந்த அம்மாக்கு ஒரு பவர் இருக்காம் கால்ல விழுந்ததும் குதற ஓட்டுராங்க. இந்த மாதிரி ஆளுங்கள நம்பர வரைக்கும் டைனோசர் கூட ஒட்டுவாங்க. நானே எனக்கு ஒரு பவர் இருக்குன்னு சொன்னாலும் நம்ம மக்கள் நம்புவாங்க. கடவுள் என்பது நம் மனசுக்குள் இருக்கார் அத மட்டும் நம்புங்க. அந்த அம்மாவுக்கு என்ன நரம்பு தளர்ச்சியா கை ஏன் இப்படி எல்லாம் ஆடுது என்று வெளுத்து வாங்கியுள்ளார் ஷகீலா.

Advertisement