தெலுகு சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் ஹீரோவான விஜய் தேவர்கொண்டா நடிப்பில் கடந்த 2017 ஆண்டு வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தெலுங்கில் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து தமிழ், ஹிந்தி என்று பல்வேறு மொழிகளிலும் ரீ-மேக் செய்யப்பட்டது. ஆனால், அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த ஷாலினி பாண்டேவிற்கு இணையாக வேறு யாரும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லை என்பது தான் ராசிகர்களின் கருத்து. அந்த அளவிற்கு அந்த படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார் ஷாலினி பாண்டே.
பப்லியான தோற்றம், சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அழகிய முகம் என்று தெலுங்கு சினிமாவில் நியூ எண்ட்ரியாக வந்த இவருக்கு தமிழ் சினிமாவிலும் ரசிகர் பட்டாளம் அதிகமாக துவங்கியது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘நடிகையர்திலகம் படத்தில் நடித்திருந்தார். மேலும், ஜி வி பிரகாஷுடன் ‘100% காதல்’ படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியது.
இதையும் பாருங்க : சூரியின் சகோதரர் மகளின் திருமணம் – முன்னின்று நடத்தி வைத்த சூரி. ஆஜரான Sk, Vjs
இறுதியாக ஜீவாவுடன் ‘கொரில்லா’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், இந்த படமும் சரியாக ஓடவில்லை. அதன் பின்னர் அனுஷ்காவுடன் நிசப்தம் படத்தில் நடித்து இருந்தார். தற்போது அம்மணிக்கு தமிழில் வாய்ப்பு எதுவும் இல்லை.இந்தியில் மட்டும் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து படத்தில் நடித்து வந்தாலும் அம்மணிக்கு ஹீரோயின் கதாபாத்திரம் கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது. இதனால் அம்மணி மற்ற நடிகைகள் பயன்படுத்தும் கவர்ச்சி யுத்தியை தற்போது பயன்படுத்தி பட வாய்ப்புகளுக்கு வலை விரித்துள்ளார் . அதே போல சமீபத்தில் உடல் எடையை குறைத்து இருந்த இவர் சமீபத்தில் முதன் முறையாக உள்ளாடையில் படு கவர்ச்சியாக போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார்.