சேனாபதிக்கு 106 வயசா? விமர்னசங்களுக்கு சீனாக்காரர் கதை சொல்லி ஷங்கர் கொடுத்த அருமையான விளக்கம்

0
82
- Advertisement -

‘இந்தியன் 2’ படத்தின் டிரைலரில் காண்பிக்கப்பட்டுள்ள கமல்ஹாசனின் பல தோற்றங்கள் தான் இப்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமல்ஹாசன். தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் கமல்ஹாசன். கடைசியாக இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த ‘விக்ரம்’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது. இதனை அடுத்து கமலின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருக்கிறார். ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த ‘இந்தியன்’ படம் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்திருந்தது.

- Advertisement -

இந்தியன் 2 படம்:

இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்து இருந்தார்கள் படக்குழு. 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சங்கர்- கமல்ஹாசன் கூட்டணியில் இந்தியன் 2 படம் உருவாகி வந்தது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இந்தியன் 2 ட்ரைலரை படக் குழுவினர் வெளியிட்டனர்.

ட்ரைலர் குறித்து:

அதில், முதல் பாகத்தில் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற இந்தியன் தாத்தாவை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவது போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ட்ரைலரில் இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசனின் பல தோற்றங்கள் காண்பிக்கப்பட்டுள்ளது.. தற்போது இந்த தோற்றங்கள் தான் மெடிசன்கள் விமர்சித்து பேசி வருகின்றனர். அதாவது, இந்தியன் முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா சேனாதிபதியின் பிறந்த வருடம் 1918 அன்று காட்டப்பட்டிருக்கிறது. அப்படி இருக்க இந்தியன் 2 படத்தில் ஜனாதிபதியின் வயது கணக்கிட்டால் 106. மேலும், இந்தியன் 2 படத்தில் 106 வயது உடைய முதியவர் எப்படி 20 கட்டு மஸ்தான உடல் கொண்ட குண்டாசுகளை பறந்து பறந்து அடிப்பது, மெட்ரோவுக்குள் ஸ்கேட்டிங், அதிரடி ஆக்சன் போன்றவை செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

-விளம்பரம்-

கமலின் விளக்கம்:

இந்நிலையில் தான் பட பிரமோஷனுக்காக மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற நடிகர் கமல் மற்றும் இயக்குனர் சங்கரிடம் இந்தியன் 2 வில் சேனாதிபதியின் வயது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கமல், வயது 140 ஆக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன், 120 வயதானாலும் நான் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், படத்தில் வயது என்ன என்பதை இயக்குனர் தான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஷங்கரின் விளக்கம் :

அதைத் தொடர்ந்து பதில் அளித்த ஷங்கர், ‘ சீனாவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டர் ஒருவர் இருக்கிறார். அவரின் பெயர் லூ ஷி ஜியான். அவருக்கு வயது 120, அந்த வயதிலும் பறந்து பறந்து அடிப்பது, கால்களில் கிக் செய்வது போன்ற மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைகளை அவர் செய்து வருகிறார். அதேபோல்தான், இந்தியன் 2 படத்தில் வரும் சேனாதிபதி கதாபாத்திரமும், ஏசியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் என்று சொல்லப்படும் வர்ம கலையில் அவர் மாஸ்டர் என்று ‘இந்தியன் 2’ படத்தில் சேனாதிபதியின் வயது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement