பெற்றோர்கள் மட்டுமே பங்குபெற்ற திருமணம். இவரு செல்வராகவனுக்கு கொஞ்சம் வேண்டப்பட்டவர் தான்.

0
1081
suja
- Advertisement -

கொரோனா வைரஸின் அச்சுருதல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவை எதிர்த்து போலீசார், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவரும் தங்களுடைய உயிரை பணயம் வைத்து இரவு, பகல் என்று பாராமல் மக்கள் உயிரை காப்பாற்ற போராடி வருகிறார்கள். இதுவரை இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,435 நெருங்கியது மற்றும் 934 பேர் பலியாகியும் உள்ளனர். அதே போல் தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1855 ஆக உயர்ந்து உள்ளது.

-விளம்பரம்-

கொரோனா பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தான் வெளியில் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஊரடங்கு உத்தரவினால் போக்குவரத்து, கடைகள், மக்களின் பொழுதுபோக்கு இடங்கள், மது கடைகள்,படப்பிடிப்புகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

- Advertisement -

மேலும், இந்த கொரோனா வைரசால் பல சுப காரியங்கள் தடை பட்டுள்ளது. இதனால் பலர் சோகத்திலும்,வருத்தத்திலும் உள்ளார்கள். கொரோனா பிரச்சனையால் பல பிரபலங்கள் தங்களின் திருமணத்தை தள்ளிப் போட்டுள்ளனர். இந்த கொரோனா காரணமாக பலர் தங்கள் திருமணத்தை எளிமையாக நடத்தியும் உள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுஜா அவர்களின் திருமணம் இன்று எளிமையாக நடைபெற்று உள்ளது. சமீபத்தில் செல்வராகவனின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த என் ஜி கே படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் செல்வராகவனின் உதவி இயக்குனராக சுஜா அரவிந்த் பணியாற்றியிருந்தார். இந்நிலையில் இன்று காலை சென்னை சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டிலேயே சுஜா அவர்கள் திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

கொரோனா பாதுகாப்பு காரணமாக இந்த திருமணத்தில் இருவீட்டார் மட்டும் கலந்து கொண்டு மிக எளிமையான முறையில் பாதுகாப்பாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்தின் போது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலர் இவர்களுக்கு திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நேற்று பேட்ட படம் நடிகர் மணிகண்டன் ஆச்சாரி அவர்கள் இதே போல் தன்னுடைய திருமணத்தை மிகவும் எளிமையாக செய்து கொண்டார்.

நடிகர் மணிகண்டன் அவர்கள் தனது திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை கொரோனா நிதிக்கு கொடுத்து விட்டார். மேலும், மலையாள நடிகை உத்ரா உண்ணி அவர்கள் தன் திருமணத்தை எளிமையாக நடத்த இருப்பதாக அறிவித்தார். தெலுங்கு நடிகர் நிதின் தன் திருமணத்தைத் தள்ளி வைத்துள்ளார். சமீபத்தில் முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் பிரமாண்டமாக நடந்தது. அந்த திருமணத்தில் சமூக விலகலை கடைபிடிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement