நடிகர்கள் வாழ்க்கை என்றால் பணம் அதிகாரம் நிறைந்த சுகபோக வாழ்க்கை என நினைப்பது தவறு. உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் கூட காலம் கைவிட்டதில் ஒருவேளை சோற்றுக்கு கூட வழி இல்லாமல் இறந்து போயிருக்கின்றனர். வேறு வழியின்று தங்களுக்கு சிறிதும் சம்மந்தம் இல்லாத வேறு வேலைகள் பார்க்கவும் சென்றுள்ளனர்.
நடிகர் சங்கர் அஸ்வத் கன்னட சினிமாவில் ஒரு காலத்தில் மிகப்பெரிய ஹீரோவாக இருந்தவர். 25 வருடங்களுக்கு முன்னர் அவருக்கு இருந்த ரசிகர் கூட்டம் என்பது அளவிற்கொள்ளாததாகும்.

ஆனால் தற்போது சினிமா வாய்ப்புகள் இன்றி பிழைக்க வலி இல்லாமல் டாக்சி ஒட்டி வருகிறார் அவர். பிரபல வாடகை கார் நிறுவனமான UBER நிறுவனத்தில் வாடகை கார் ஓட்டி பிழைத்து வருகிறார் சங்கர் அஸ்வத்.

Advertisement

இது குறித்து அறிந்த பலர் அவரை அணுகி ஏன் இப்படி இருக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு,
நான் வாடகை கார் ஓட்டுவதால் என்னை யாரும் இழிவாக நினைக்க வேண்டாம். இதுவும் ஒரு உன்னதமான தொழில். இதனால் யாரும் என்மேல் பரிதாபப்பட வேண்டாம். இன்னும் சில மாதங்களில் என் தந்தையின் இறந்த நாள் சடங்கு வருகிறது. (ஒவ்வொரு வருடமும் செலுத்தும் இறுதி சடங்கு) அதனை அவருக்கு நான் செய்ய வேண்டும்.
அதற்காக நான் தற்போது வாடகை காரி ஓட்டி பணம் சேமித்து வருகிறேன். என பரிதாபமாக கூறியுள்ளார். காலம் கைவிட்டால் ரஜினிகாந்த் ஆயினும் தெருவுக்கு வந்தாக வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

Advertisement